பொது செய்தி

தமிழ்நாடு

தேனி பைபாஸ் ரோட்டில் குவியும் குப்பையால் சுகாதார சீர்கேடு

Added : செப் 30, 2021
Share
Advertisement
தேனி : தேனி புது பஸ்ஸ்டாண்டில் இருந்து பெரியகுளம் செல்லும் பைபாஸ் ரோட்டில் குவிந்துள்ள குப்பையால் துர்நாற்றம் வீசி பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.இந்த ரோட்டில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. அதிகாலையில் பலர் நடைப்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பைபாஸ் ரோட்டோரம் இறைச்சி, கட்டட கழிவுகள், குப்பை ஒரு மாதமாக கொட்டுவதால் குவிந்துள்ளன.

தேனி : தேனி புது பஸ்ஸ்டாண்டில் இருந்து பெரியகுளம் செல்லும் பைபாஸ் ரோட்டில் குவிந்துள்ள குப்பையால் துர்நாற்றம் வீசி பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

இந்த ரோட்டில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. அதிகாலையில் பலர் நடைப்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பைபாஸ் ரோட்டோரம் இறைச்சி, கட்டட கழிவுகள், குப்பை ஒரு மாதமாக கொட்டுவதால் குவிந்துள்ளன. இறைச்சி கழிவுகளை தேடி தெருநாய்கள் அதிகளவில் சுற்றி வருவதால் நடந்து செல்லும் பொதுமக்கள் அச்சத்துடன் செல்கின்றனர். மேலும் காற்றில் பறக்கும் குப்பையால் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

ராஜாராம், பங்களாமேடு:தேனி-பெரியகுளம் ரோட்டில் பலரும் தினமும் நடைப்பயிற்சி செல்கிறேன். சமீபமாக ரோட்டோரம் குப்பை கொட்டப்பட்டு தேக்கமடைந்துள்ளது. இதில் இறந்த நாய் அழுகிய நிலையில் உள்ளது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் சூழல் நிலவுகிறது. தேனி நகராட்சியில் குப்பை தொட்டிகள் போதியளவில் இல்லாததால் மொத்தமாக சேரும் குப்பையை இரவில் இங்கு கொட்டி செல்கிறார்கள். இதை தடுத்து குப்பை பிரச்னைக்கு நகராட்சி தீர்வு காண வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X