துாய்மை பணியாளர் பற்றாக்குறை குப்பை கையாள முடியாமல் திணறல்| Dinamalar

துாய்மை பணியாளர் பற்றாக்குறை குப்பை கையாள முடியாமல் திணறல்

Added : செப் 30, 2021
Share
கும்மிடிப்பூண்டி--குடியிருப்பு பகுதிகள் கொண்ட ஊராட்சிகளில், போதிய துாய்மை பணியாளர்கள் இன்றி, குப்பையை கையாள முடியாமல் திணறி வருகின்றனர். இதனால், மக்களின் சுகாதாரம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.கும்மிடிப்பூண்டி நகரை ஒட்டியுள்ள தேர்வழி, பெத்திக்குப்பம் ஊராட்சிகளில், நேதாஜி நகர், பிரித்வி நகர், முனுசாமி நகர், பெரியார் நகர், பூபால் நகர் உள்ளிட்ட, 25க்கும் மேற்பட்ட

கும்மிடிப்பூண்டி--குடியிருப்பு பகுதிகள் கொண்ட ஊராட்சிகளில், போதிய துாய்மை பணியாளர்கள் இன்றி, குப்பையை கையாள முடியாமல் திணறி வருகின்றனர். இதனால், மக்களின் சுகாதாரம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.கும்மிடிப்பூண்டி நகரை ஒட்டியுள்ள தேர்வழி, பெத்திக்குப்பம் ஊராட்சிகளில், நேதாஜி நகர், பிரித்வி நகர், முனுசாமி நகர், பெரியார் நகர், பூபால் நகர் உள்ளிட்ட, 25க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகள் உள்ளன. ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் வசித்து வரும், அந்த பகுதிகளில், தினசரி, 3 டன் குப்பை சேகரமாகின்றன.போதிய துாய்மை பணியாளர்கள் இல்லாததால், குப்பையை சேகரிப்பதும், திடக்கழிவு மேலாண் திட்டம் செயல்படுத்துவதும், கடும் சவாலாக உள்ளது.இதனால், மேற்கண்ட இரு ஊராட்சிகளுக்கும் பொதுவாக உள்ள ஏரிக்கரை ஓரம், ஜி.என்.டி., சாலையோரம், மற்றும் சென்னை - - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையோரம், பல இடங்களில் குப்பை குவித்து எரித்து வருகின்றனர்.குப்பை குவிக்கும் இடங்களில், துர்நாற்றம் வீசுவதுடன், அதை எரிப்பதால், சுவாச பிரச்னை உள்ளிட்ட பல உடல் நல பாதிப்புகளுக்கு மக்கள் ஆளாகின்றனர்.அதிக குடியிருப்பு பகுதிகள் கொண்ட தேர்வழி மற்றும் பெத்திக்குப்பம் ஊராட்சிகள் மீது, கும்மிடிப்பூண்டி ஒன்றிய நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.போதிய துாய்மை பணியாளர்களை நியமனம் செய்து, தினசரி குப்பையை சேகரித்து, திடக்கழிவு மேலாண் திட்டம் செயல்படுத்த வேண்டும் என, அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X