பொது செய்தி

தமிழ்நாடு

போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கடைக்காரர்கள் ஒத்துழைப்பு அவசியம்

Added : செப் 30, 2021
Share
Advertisement
திருத்தணி,-'திருத்தணியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கடைக்காரர்கள் ஒத்துழைப்பு அவசியம்' என, இன்ஸ்பெக்டர் அறிவுறுத்தினார்.அடுத்த மாதம், ஆயுத பூஜை, தீபாவளி போன்ற பண்டிகை நாட்கள் அதிகம் வருவதால், திருத்தணி நகரில் போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரிக்கும்.இதை தடுக்கும் வகையில், திருத்தணி போக்குவரத்து போலீசார் சார்பில், நேற்று, கடை உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம்

திருத்தணி,-'திருத்தணியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கடைக்காரர்கள் ஒத்துழைப்பு அவசியம்' என, இன்ஸ்பெக்டர் அறிவுறுத்தினார்.அடுத்த மாதம், ஆயுத பூஜை, தீபாவளி போன்ற பண்டிகை நாட்கள் அதிகம் வருவதால், திருத்தணி நகரில் போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரிக்கும்.இதை தடுக்கும் வகையில், திருத்தணி போக்குவரத்து போலீசார் சார்பில், நேற்று, கடை உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ஜெயகுமார் பேசியதாவது:திருத்தணி நகரில், ம.பொ.சி., சாலை, அரக்கோணம் சாலை மற்றும் சன்னிதி தெரு ஆகிய இடங்களில், தினசரி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இனிவரும் நாட்கள், பண்டிகை காலம் என்பதால், காந்தி சிலை அருகில், சாலையோரம் தற்காலிக கடைகள் வைப்பர். இதனால் அங்கு, போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.இதுதவிர, சில கடைக்காரர்கள், தங்களது கடை முன் சாலையை ஆக்கிரமித்து வியாபாரம் செய்வதாலும், வாகனங்களை நிறுத்துவதாலும், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கடைக்காரர்கள் ஒத்துழைப்பு அவசியம். கடைக்காரர்கள் தங்களது வாகனங்களை சாலையில் நிறுத்தாமல், தனியாக ஒரு இடத்தில் நிறுத்த வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.கூட்டத்தில், திருத்தணி நகர வியாபாரிகள் சங்கத்தினர் மற்றும், 100க்கும் மேற்பட்ட கடை உரிமையாளர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X