பொது செய்தி

தமிழ்நாடு

'வெறும் அறிவிப்பு மட்டுமே': முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு

Added : செப் 30, 2021
Share
Advertisement
அன்னுார் : ''முதல்வர் ஸ்டாலின், 202 வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக கூறுகிறார். ஆனால், வெறும் அறிவிப்பு மட்டுமே வெளியிட்டுள்ளார்,'' என முன்னாள் அமைச்சர் வேலுமணி குற்றம் சாட்டியுள்ளார்.கோவை மாவட்ட ஊராட்சி வார்டு எண் 3ல், மாவட்ட கவுன்சிலர் தேர்தலில், அ.தி.மு.க., வேட்பாளராக போட்டியிடும் கருப்பசாமியை ஆதரித்து, முன்னாள் அமைச்சர் வேலுமணி, கரியாம்பாளையத்தில் பேசுகையில்,
 'வெறும் அறிவிப்பு மட்டுமே': முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு

அன்னுார் : ''முதல்வர் ஸ்டாலின், 202 வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக கூறுகிறார். ஆனால், வெறும் அறிவிப்பு மட்டுமே வெளியிட்டுள்ளார்,'' என முன்னாள் அமைச்சர் வேலுமணி குற்றம் சாட்டியுள்ளார்.

கோவை மாவட்ட ஊராட்சி வார்டு எண் 3ல், மாவட்ட கவுன்சிலர் தேர்தலில், அ.தி.மு.க., வேட்பாளராக போட்டியிடும் கருப்பசாமியை ஆதரித்து, முன்னாள் அமைச்சர் வேலுமணி, கரியாம்பாளையத்தில் பேசுகையில், ''முதல்வர் ஸ்டாலின், 202 வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக கூறுகிறார். ஆனால், வெறும் அறிவிப்பு மட்டுமே வெளியிட்டுள்ளார்.

டீசல் விலையை குறைத்தால் தான் விலைவாசி குறையும். பெட்ரோல் விலையை வெறும் மூன்று ரூபாய் குறைத்துவிட்டு சாதனை என்று சொல்கின்றனர். கோவை மாவட்டத்தில் சட்டசபை தேர்தலில், பத்துக்கு பத்து தொகுதி வெற்றி பெற்றது போல், இங்கும் வெற்றி பெற வேண்டும்,'' என்றார்.

தெற்கு ஒன்றிய செயலாளர் சாய் செந்தில் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ.,க்கள் அருண்குமார், அமுல் கந்தசாமி மற்றும் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.வடக்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் ஒன்றிய செயலாளர் அம்பாள் பழனிசாமி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது, அங்கு நான்கு இடங்களில் பிரசாரம் செய்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X