பொது செய்தி

தமிழ்நாடு

ஆடி பட்ட வேர்க்கடலை அறுவடை மும்முரம்

Added : செப் 30, 2021
Share
Advertisement
உத்திரமேரூர்-உத்திரமேரூர் வட்டாரத்தில், ஆடி பட்டத்தில் விதைப்பு செய்த வேர்க்கடலை அறுவடையில், விவசாய கூலி தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.கடந்த ஆண்டு உத்திரமேரூர் வட்டாரத்தில், வடகிழக்கு பருவமழை போதுமான அளவு பெய்ததால், உத்திரமேரூர் ஏரி மட்டுமல்லாமல், ஒன்றிய கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளும் நிரம்பின.இதனால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து, விவசாய கிணறுகளில்

உத்திரமேரூர்-உத்திரமேரூர் வட்டாரத்தில், ஆடி பட்டத்தில் விதைப்பு செய்த வேர்க்கடலை அறுவடையில், விவசாய கூலி தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.கடந்த ஆண்டு உத்திரமேரூர் வட்டாரத்தில், வடகிழக்கு பருவமழை போதுமான அளவு பெய்ததால், உத்திரமேரூர் ஏரி மட்டுமல்லாமல், ஒன்றிய கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளும் நிரம்பின.இதனால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து, விவசாய கிணறுகளில் விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் இருந்ததால், முதல்போகம் முடிந்தவுடன் இரண்டாம் போகத்தில் நெல், வேர்க்கடலை உள்ளிட்டவை பயிரிட்டனர்.கடந்த ஆடி மாதத்ததில் மழையை எதிர்பார்த்து, இளநகர், மேல்பாக்கம், அழிசூர் உள்ளிட்ட கிராமங்களில், வேர்க்கடலை பயிரிட்டனர்.அவை, காய் பிடித்து அறுவடைக்கு தயாராகியுள்ளதால், வேருடன் அறுவடைப்பட்டு வருகிறது. செடி தனியாகவும், காய் தனியாகவும் பிரிக்கும் பணியில், பெண் விவசாய கூலி தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.இளநகர் விவசாயி ஏழுமலை கூறியதாவது:ஆடி பட்டத்தில், வேர்க்கடலை விதைப்பு செய்தேன். ஆடி இறுதியில் போதுமான மழை பெய்யாததால், தண்ணீர் குறைபாட்டால், நன்கு காய்பிடிக்காமல், விளைச்சல் வெகுவாக குறைந்துள்ளது. அடுத்த முறை பயிரிட விதைக்கும், குடும்ப தேவைக்கு மட்டுமே விளைந்துள்ளது.இவ்வாறு அவர்கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X