பொது செய்தி

தமிழ்நாடு

அவசர கால கடன் திட்டம் அவகாசம் நீட்டிப்பு; ஏ.இ.பி.சி., வரவேற்பு

Added : செப் 30, 2021
Share
Advertisement
திருப்பூர் : அவசர கால கடன் திட்டம், வரும் 2022 மார்ச் வரை நீட்டிப்பு செய்யப்பட்டிருப்பது, ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து ஏ.இ.பி.சி., தலைவர் சக்திவேல் அறிக்கை:கடந்த 2020ம் ஆண்டு முதல், கொரோனா பெருந்தொற்று நாடுமுழுவதும் பரவியது. இதனால், ஆயத்த ஆடை உற்பத்தி உட்பட பல்வேறுவகை தொழில்நிறுவனங்கள் மிக கடுமையான நிதி நெருக்கடிக்குள்

திருப்பூர் : அவசர கால கடன் திட்டம், வரும் 2022 மார்ச் வரை நீட்டிப்பு செய்யப்பட்டிருப்பது, ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ஏ.இ.பி.சி., தலைவர் சக்திவேல் அறிக்கை:கடந்த 2020ம் ஆண்டு முதல், கொரோனா பெருந்தொற்று நாடுமுழுவதும் பரவியது. இதனால், ஆயத்த ஆடை உற்பத்தி உட்பட பல்வேறுவகை தொழில்நிறுவனங்கள் மிக கடுமையான நிதி நெருக்கடிக்குள் தள்ளப்பட்டன.பாதிப்புகளிலிருந்து நிறுவனங்கள் மீள்வதற்காக, மத்திய அரசு, அவசர கால கடன் திட்டத்தை (இ.சி.எல்.ஜி.எஸ்.,) கொண்டுவந்தது.

இந்த திட்டத்தில், நிறுவனங்களுக்கு பிணையமின்றி கடன் வழங்குவதற்காக, 4.5 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 2.85 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது.மீதமுள்ள 1.65 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்க, 2022 மார்ச் 31, கால நீட்டிப்பு செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதனால், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு ஏற்பட்டுவரும் நிதி சார் நெருக்கடிகள் விலகும்.இவ்வாறு, அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X