குடிநீர் கேட்டு உள்ளாட்சி பிரதிநிதிகள் மறியல் முயற்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குடிநீர் கேட்டு உள்ளாட்சி பிரதிநிதிகள் மறியல் முயற்சி

Added : செப் 30, 2021
Share
அவிநாசி : அவிநாசி ஊராட்சி ஒன்றியம், பழங்கரை, சின்னேரிபாளையம், குப்பாண்டம்பாளையம் மற்றும் திருப்பூர், பொங்கு பாளையம் ஊராட்சிகளுக்கு, கடந்த, 25 நாளாக குடிநீர் வினியோகம் சீராக இல்லை என, அந்தந்த ஊராட்சி தலைவர்கள் மூலம், மாவட்ட கலெக்டரிடம் மனு வழங்கப்பட்டு இருந்தது.நேற்று பழங்கரை ஊராட்சி மன்ற அலுவலகத்தில், ஊராட்சி தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளிடம் குடிநீர் வடிகால் வாரிய

அவிநாசி : அவிநாசி ஊராட்சி ஒன்றியம், பழங்கரை, சின்னேரிபாளையம், குப்பாண்டம்பாளையம் மற்றும் திருப்பூர், பொங்கு பாளையம் ஊராட்சிகளுக்கு, கடந்த, 25 நாளாக குடிநீர் வினியோகம் சீராக இல்லை என, அந்தந்த ஊராட்சி தலைவர்கள் மூலம், மாவட்ட கலெக்டரிடம் மனு வழங்கப்பட்டு இருந்தது.

நேற்று பழங்கரை ஊராட்சி மன்ற அலுவலகத்தில், ஊராட்சி தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளிடம் குடிநீர் வடிகால் வாரிய உதவி பொறியாளர் கமலகண்ணன் பேச்சு நடத்தினார். திருப்தியடையாத ஊராட்சி தலைவர்கள் கோமதி (பழங்கரை), சரவணன் (சின்னேரிபாளையம்), கமலவேணி (குப்பாண்டம்பாளையம்), சுலோசனா (பொங்குபாளையம்) அவிநாசி யூனியன் கவுன்சிலர் கார்த்திகேயன் மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள் சிலர், திருப்பூர் ரோட்டில் மறியல் செய்ய முற்பட்டனர்.இதனால், பி.டி.ஓ., மகேஸ்வரி முன்னிலையில், மீண்டும் பேச்சு நடந்தது.

ஊராட்சி பிரதிநிதிகள் கூறுகையில், "இரண்டாவது குடிநீர் திட்டத்தின் கீழ் வழக்கமாக வினியோகிக்கப்படும் தண்ணீர் வினியோகமே தடைபட்டுள்ளது" என்றனர்.உதவி பொறியாளர் கமலகண்ணன் கூறியதாவது:அனைத்து இடங்களிலும் வீடுகளின் எண்ணிக்கை அதிகரித்து விட்டதால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இப்பகுதிகளில், அனுமதியற்ற குழாய் இணைப்புகளை கண்டறிந்து, அவற்றை முறைப்படுத்தவும், ஒவ்வொரு உள்ளாட்சி நிர்வாகங்களுக்கும் வரையறுக்கப்பட்ட அளவு தண்ணீர் வினியோகம் செய்ய வேண்டும் என்ற யோசனையை கலெக்டரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம்.பழங்கரை, சின்னேரிபாளையம், குப்பாண்டாம்பாளையம், பொங்குபாளையம் ஊராட்சிகளுக்கு, ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த தண்ணீர் தொடர்ந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.இதனால், உள்ளாட்சி பிரதிநிதிகள் சமாதானம் அடைந்து, கலைந்து சென்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X