பொது செய்தி

தமிழ்நாடு

எம்.எல்.ஏ., சீட்டுக்கு பதில்

Added : செப் 30, 2021
Share
Advertisement
திருப்போரூர் ஒன்றியத்தின் மூன்றாவது வார்டு கானத்துார் ரெட்டிக்குப்பம் கவுன்சிலர் பதவிக்கு, தி.மு.க., சார்பில், முன்னாள் எம்.எல்.ஏ., இதயவர்மன் போட்டியிடுகிறார்.கடந்த, 2019 இடைத்தேர்தலில் திருப்போரூர் தொகுதியில் போட்டியிட்டு, எம்.எல்.ஏ.,வாக ஆனவர். நில தகராறு ஒன்றில், அவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதால், அப்போதே கைது செய்யப்பட்டார்.இந்த சம்பவத்தால் தி.மு.க.,வின் பெயருக்கு

திருப்போரூர் ஒன்றியத்தின் மூன்றாவது வார்டு கானத்துார் ரெட்டிக்குப்பம் கவுன்சிலர் பதவிக்கு, தி.மு.க., சார்பில், முன்னாள் எம்.எல்.ஏ., இதயவர்மன் போட்டியிடுகிறார்.கடந்த, 2019 இடைத்தேர்தலில் திருப்போரூர் தொகுதியில் போட்டியிட்டு, எம்.எல்.ஏ.,வாக ஆனவர். நில தகராறு ஒன்றில், அவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதால், அப்போதே கைது செய்யப்பட்டார்.இந்த சம்பவத்தால் தி.மு.க.,வின் பெயருக்கு கலங்கம் ஏற்பட்டதால், கடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்பிய இதயவர்மனுக்கு, கட்சி தலைமை சீட் வழங்கவில்லை. வி.சி.க., சார்பில் நிறுத்தப்பட்ட பாலாஜி என்பவர் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.,வாக இருக்கிறார்.இதில் அதிருப்தியடைந்த இதயவர்மனை குளிர்ச்சியாக்கவே, இந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு சீட் வழங்கப்பட்டு உள்ளது. இப்போது மட்டும் கட்சி பெயருக்கு கலங்கம் இல்லைபோல!தேர்தல் களத்தில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள இவருக்கு, கோடிக்கணக்கில் சொத்து இருப்பது தெரியவந்துள்ளது.இவர் தாக்கல் செய்த வேட்பு மனுவில் 2.78 கோடி ரூபாய் மதிப்பில் அசையும், அசையா சொத்துகளும், மனைவி பெயரில் 20 லட்சம் மதிப்பில் அசையும் சொத்துகள்இருப்பதாகவும்தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X