போலீஸ் செய்திகள்

Added : செப் 30, 2021
Share
Advertisement
நகை பறிப்புதிருமங்கலம்: ராயபாளையம் விவசாயி சுப்புராஜ் மனைவி பாண்டியம்மாள் 50. நேற்று முன்தினம் தோட்ட வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியபோது அரசு பள்ளி அருகே டூவீலரில் வந்த இருவர் 7 பவுன் செயினை பறிக்க முயன்றனர். பாண்டியம்மாள் தடுத்து போராடியதில் செயின் அறுந்து 5 பவுன் அவரது கையிலும் 2 பவுன் கொள்ளையர் கையிலும் சிக்கியது. போலீசார் விசாரிக்கின்றனர்.கத்திக்குத்து

நகை பறிப்பு

திருமங்கலம்: ராயபாளையம் விவசாயி சுப்புராஜ் மனைவி பாண்டியம்மாள் 50. நேற்று முன்தினம் தோட்ட வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியபோது அரசு பள்ளி அருகே டூவீலரில் வந்த இருவர் 7 பவுன் செயினை பறிக்க முயன்றனர். பாண்டியம்மாள் தடுத்து போராடியதில் செயின் அறுந்து 5 பவுன் அவரது கையிலும் 2 பவுன் கொள்ளையர் கையிலும் சிக்கியது. போலீசார் விசாரிக்கின்றனர்.

கத்திக்குத்து சிந்துபட்டி: வி. கள்ளப்பட்டி தங்கராமன் 30. வேப்பனுாத்து பாலகிருஷ்ணன் 22. இருவரும் குடிபோதையில் வாய் தகராறில் ஈடுபட்டனர். இதையடுத்து அப்பா கண்ணன் 50, அவரது 16 வயது தம்பியுடன் சேர்ந்து தங்கராமனை கத்தியால் குத்தினார். 5 பேர் கைதுஉசிலம்பட்டி: எம்.கல்லுப்பட்டியில் ஒரு சமூகத்தினருக்கான இடத்தை கோர்ட் உத்தரவுப்படி அளவீடு செய்த பகுதியில் ஊன்றப்பட்ட கற்களை சேதப்படுத்தியும், பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மீது கற்களால் தாக்கியும் போராட்டத்தில் சிலர் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக வேலுச்சாமி, பெரியகருப்பன், தங்கம், இன்பம், கணேஷ்பாண்டி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். நுாதன திருட்டுமேலுார்: தெற்குப்பட்டி மண் அள்ளும் இயந்திரத்தின் டிரைவர் நொண்டிச்சாமி 40. நேற்று மாலை மேலுார் மெயின் ரோட்டில் நின்றிருந்தபோது, அரசு பஸ் கண்டக்டர் உடையில் வந்தவர் பஸ் ஸ்டாண்டில் லேப்டாப் விற்பனைக்கு இருப்பதாக கூறி ரூ.2 ஆயிரம் பெற்று, அவ்வழியே வந்த பஸ்சில் ஏறி தலைமறைவானார். கடையில் திருட்டுசோழவந்தான்: நாகமலைபுதுக் கோட்டை முருகானந்தம் 48. இவரது சைக்கிள் கடை கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் ரூ.1.95 லட்சத்தை திருடிச்சென்றனர்.ஐகோர்ட் வளாகத்தில் விழுந்து பலிமதுரை: மானகிரி பாண்டி 52. ஐகோர்ட் வளாகத்தில்

ஒப்பந்தக்காரரின்கீழ் நடந்த கட்டுமான பணியின்போது கீழே விழுந்து காயமுற்றார். அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் நேற்று இறந்தார்.பிளஸ் 2 மாணவர் உயிரிழப்புகருமாத்துார்: ஜோதிமாணிக்கம் பரமசிவம் மகன் முத்துக்குமார் 16. தனியார் பள்ளியில் பிளஸ் 2 படிக்கிறார். வலிப்பு நோய் பாதிப்பு உள்ளது. நேற்று பள்ளி முடிந்து வீட்டுக்கு வரும் போது கருமாத்தூர் கோட்டையூர் பஸ்ஸ்டாப் அருகே வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து இறந்தார். செக்கானூரணி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X