சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மங்கலம் போலீசார் மீது எஸ்.பி., ஆபீசில் பெண் புகார்

Added : செப் 30, 2021
Share
Advertisement
திருப்பூர் : திருப்பூர் கோர்ட் உத்தரவின் படி பதியப்பட்ட வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்காமல் உள்ள மங்கலம் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளித்தார்.திருப்பூர், எஸ்.ஆர்., நகரை சேர்ந்த மைதிலி, 42 என்பவர், எஸ்.பி., அலுவலக்தில் நேற்று அளித்த புகார் மனு:மங்கலத்தை சேர்ந்த, தனியார் ஒருவருக்கு, வீடு கட்டி கொடுத்தேன். ஆனால்,

திருப்பூர் : திருப்பூர் கோர்ட் உத்தரவின் படி பதியப்பட்ட வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்காமல் உள்ள மங்கலம் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளித்தார்.

திருப்பூர், எஸ்.ஆர்., நகரை சேர்ந்த மைதிலி, 42 என்பவர், எஸ்.பி., அலுவலக்தில் நேற்று அளித்த புகார் மனு:மங்கலத்தை சேர்ந்த, தனியார் ஒருவருக்கு, வீடு கட்டி கொடுத்தேன். ஆனால், பணத்தை, தராமல் உரிமையாளர் மோசடி செய்த நிலையில், இது குறித்து, மங்கலம் போலீசில் புகார் அளித்தேன்.ஆனால், நடவடிக்கை எடுக்கவில்லை.

அதனால், திருப்பூர் கோர்ட்டில் புகார் அளித்து, மாஜிஸ்திரேட் உத்தரவுப்படி, கடந்த மே 7ம் தேதி மோசடி செய்த நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தற்போது, அந்த வீட்டை, மாநகர போலீசில் பணிபுரியும் போலீசார் ஒருவரே வாங்கியுள்ளார்.நீதி கேட்டு மங்கலம் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றால், பெண் என்றும் பாராமல், அவமானப்படுத்தும் வகையில் பேசுகின்றனர். எனவே, இவ்விவகாரத்தில் மங்கலம் போலீசார் மீது மற்றும் மோசடியில் ஈடுபட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X