பொது செய்தி

தமிழ்நாடு

சரக்கு வாங்கி கட்டுபடி ஆகலையே?

Added : செப் 30, 2021
Share
Advertisement
கா ஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் சூடு பறக்கிறது. பிரசாரம், ஓட்டு சேகரிப்பு, பரிசு பொருட்கள் வழங்கல் என, வேட்பாளர்கள் பயங்கர 'பிசி'யாக இருக்கின்றனர்.ஓட்டு சேகரிப்பில் ஈடுபடும் வேட்பாளர்கள், தங்கள் ஆதரவாளர்கள் மற்றும் குறிப்பிட்ட வாக்காளர்களுக்கு மது வழங்குவதை தினந்தோறும் செய்கின்றனர்; மாலையில் மது விருந்து அமோகமாக நடக்கிறது.இதனால்,

கா ஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் சூடு பறக்கிறது. பிரசாரம், ஓட்டு சேகரிப்பு, பரிசு பொருட்கள் வழங்கல் என, வேட்பாளர்கள் பயங்கர 'பிசி'யாக இருக்கின்றனர்.ஓட்டு சேகரிப்பில் ஈடுபடும் வேட்பாளர்கள், தங்கள் ஆதரவாளர்கள் மற்றும் குறிப்பிட்ட வாக்காளர்களுக்கு மது வழங்குவதை தினந்தோறும் செய்கின்றனர்; மாலையில் மது விருந்து அமோகமாக நடக்கிறது.இதனால், ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளருக்கு ஒரு நாளைக்கு 10 - 20 பெட்டி வரை சரக்கு தேவையாக உள்ளது.இந்த அளவுக்கு தமிழக 'டாஸ்மாக்'கில் மது பாட்டில்கள் வாங்கினால், 1.50 - 2 லட்சம் ரூபாய் வரை செலவிட வேண்டி உள்ளது. இதனால், புதுச்சேரி மாநிலம் சென்று குறைந்த விலையில் மது வகைகளை வாங்கி வருகின்றனர்.இன்னொரு பக்கம் புதுச்சேரி, கர்நாடகா மாநிலத்தில் இருந்து பிளாஸ்டிக் புட்டி மற்றும் சிறிய அட்டை பெட்டியில் அடைக்கப்பட்ட 60 - 80 ரூபாய் விலை உடைய மதுபாட்டில்களை இறக்குமதி செய்து, ஆதரவாளர்களுக்கு வினியோகம் செய்கின்றனர்.சில இடங்களில் போலீசாரிடம் சிக்கிக்கொண்டு, பாட்டில்களை பறிகொடுத்து, தண்டமாக பணம் கட்டி, வெறும் கையோடு திரும்பும் வேட்பாளர்களும் உள்ளனர்.'செக்போஸ்ட்' தவிர்த்து, போலீஸ் கண்ணில் சிக்காமல் வருவதற்காக புதுப்புது வழிகளை தேர்வு செய்து, இடைத்தரகர்களை வைத்தும் சில வேட்பாளர்கள் 'சிறப்பாக' செயல்படுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X