பொது செய்தி

தமிழ்நாடு

காற்றுக்கு முறிந்த மரங்கள்; அசம்பாவிதம் தவிர்ப்பு

Added : செப் 30, 2021
Share
Advertisement
திருப்பூர் : திருப்பூர் மற்றும் கருவலுாரில் பலத்த காற்றுக்கு பெரிய மரங்கள் சாய்ந்தன. அதிர்ஷ்டவசமாக அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.திருப்பூர் சுற்றுப்பகுதியில் கடந்த இரு நாள் முன்னர் சில பகுதிகளில் பலத்த காற்று வீசியது. பலத்த காற்று காரணமாக தாராபுரம் ரோடு, பெரிச்சிபாளையம் பிரிவு அருகே வணிக வளாகத்தின் முன் இருந்த ஒரு மரம் வேரோடு முறிந்து கீழே விழுந்தது. இதனால், ஒரு

திருப்பூர் : திருப்பூர் மற்றும் கருவலுாரில் பலத்த காற்றுக்கு பெரிய மரங்கள் சாய்ந்தன. அதிர்ஷ்டவசமாக அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

திருப்பூர் சுற்றுப்பகுதியில் கடந்த இரு நாள் முன்னர் சில பகுதிகளில் பலத்த காற்று வீசியது. பலத்த காற்று காரணமாக தாராபுரம் ரோடு, பெரிச்சிபாளையம் பிரிவு அருகே வணிக வளாகத்தின் முன் இருந்த ஒரு மரம் வேரோடு முறிந்து கீழே விழுந்தது. இதனால், ஒரு பகுதியில் வாகனங்கள் செல்ல இயலாத நிலை ஏற்பட்டது.அப்பகுதியினர் ரோட்டின் மையப்பகுதியில் கிடந்த மரக்கிளைகளை வெட்டி ஓரமாக போட்டனர். இதனால், போக்குவரத்துக்கு வழி ஏற்பட்டது.

இருப்பினும் வேரோடு சாய்ந்து கிடந்த மரம் அகற்றப்படாமல் கிடந்தது. ஒரு வழியாக நேற்று மாலை 3:00 மணியளவில் தெற்கு தீயணைப்பு துறையினர், மரத்தின் கிளைகளை வெட்டி அகற்றினர்.கருவலுாரில்...அவிநாசி அருகேயுள்ள கருவலுாரில் மாரியம்மன் கோவிலுக்கு முன் பரந்து விரிந்த 100 ஆண்டு பழமையான அரச மரத்தடியில், பழமையான விநாயகர் கோவில் உள்ளது.கடந்த இரு நாட்களாக அப்பகுதியில் பலத்த காற்று வீசிய நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு, 2:00 மணிக்கு மரத்தின் ஒரு பகுதி சாய்ந்தது. இரவு நேரம் என்பதால், யாரும் இல்லை. அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X