தமிழ்நாடு

18 ரவுடிகள் கைது; 109 பேர் கண்காணிப்பு; மாநகர போலீசார் நடவடிக்கை

Added : செப் 30, 2021
Share
Advertisement
திருப்பூர் : திருப்பூரில், கொலை, கொள்ளை, அடி தடி உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடைய, 18 ரவுடிகளை மாநகர போலீசார் கைது செய்தனர். மாநகரம் மற்றும் மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் தொடர்புடைய பழைய குற்றவாளிகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, 109 பேர் கண்காணிப்பு வளையத்துக்குள் உள்ளனர்.சமீபத்தில் நெல்லை, திண்டுக்கல் மாவட்டத்தில், பயங்கரமான முறையில் பழிக்கு பழி கொலைகள் நடந்தன.

திருப்பூர் : திருப்பூரில், கொலை, கொள்ளை, அடி தடி உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடைய, 18 ரவுடிகளை மாநகர போலீசார் கைது செய்தனர்.

மாநகரம் மற்றும் மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் தொடர்புடைய பழைய குற்றவாளிகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, 109 பேர் கண்காணிப்பு வளையத்துக்குள் உள்ளனர்.சமீபத்தில் நெல்லை, திண்டுக்கல் மாவட்டத்தில், பயங்கரமான முறையில் பழிக்கு பழி கொலைகள் நடந்தன. இதனால், சட்டம் - ஒழுங்கு பிரச்னை தலை துாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பிரச்னை ஏற்படுத்துவோரை கண்காணித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாநிலம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.

18 ரவுடிகள் கைது

அதன்படி, திருப்பூர் மாநகர மற்றும் மாவட்ட போலீசார் கடந்த 23 முதல், 26 ம் தேதி வரை தொடர்ந்து பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டு, வாகன தணிக்கை செய்தனர். அதில், பல்வேறு கொலை, கொள்ளை உள்ளிட்டவைகளில் தொடர்புடைய, 18 ரவுடிகளை மாநகர போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அதேபோல், 109 மற்றும் 110 சி.ஆர்.பி.சி., பிரிவின் கீழ் உள்ள பழைய குற்றவாளிகள் மாநகரில், 19 பேர், மாவட்டத்தில், 90 பேர் என, 109 பேர் விசாரணைக்கு ஆஜர்படுத்தப்பட்டு, நன்னடத்தை உறுதி சான்றிதழ் பெறப்பட்டது. இவர்கள் அனைவரும் தற்போது போலீசார் கண்காணிப்பு வளையத்துக்குள் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X