அணைப்புதூரில் உருவாகிறது பசுமை பூங்கா! வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தில் அசத்தல்| Dinamalar

தமிழ்நாடு

அணைப்புதூரில் உருவாகிறது பசுமை பூங்கா! 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில் அசத்தல்

Added : செப் 30, 2021
Share
திருப்பூர் : ஒரே இடத்தில், 130 வகையான, 700 மரக்கன்றுகளை நட்டு, மிகப்பெரிய மரப்பூங்காவை உருவாக்குகிறது, 'தி சென்னை சில்க்ஸ்' குழுமத்தின், 'கிரீன் டுடே கார்டன்'.திருப்பூர் வெற்றி அமைப்பு, பல்வேறு பசுமை அமைப்புகள், தொழில்துறையினர், தன்னார்வலர், விவசாயிகளுடன் கரம் கோர்த்து, 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அரசு நிலம், விவசாயிகளின் நிலத்தை

திருப்பூர் : ஒரே இடத்தில், 130 வகையான, 700 மரக்கன்றுகளை நட்டு, மிகப்பெரிய மரப்பூங்காவை உருவாக்குகிறது, 'தி சென்னை சில்க்ஸ்' குழுமத்தின், 'கிரீன் டுடே கார்டன்'.திருப்பூர் வெற்றி அமைப்பு, பல்வேறு பசுமை அமைப்புகள், தொழில்துறையினர், தன்னார்வலர், விவசாயிகளுடன் கரம் கோர்த்து, 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அரசு நிலம், விவசாயிகளின் நிலத்தை பரிசோதனை செய்து, மண்ணுக்கு ஏற்ற மரக்கன்றுகளை நட்டு கொடுக்கிறது.

விவசாயிகள் மரத்தை வளர்ப்பதன் மூலம், தரிசாக கிடந்த நிலங்கள் இன்று, பசுமை பூக்கும் குறுங்காடுகளாக மாறியுள்ளன. எண்ண முடியாத அளவுக்கு, சிறு, குறு உயிரினங்களுக்கு, இயற்கை சூழலுடன் கூடிய வாழ்வியல் மையங்களாக மாறியுள்ளன.கடந்த, 4வது திட்டத்தின் போது, தி சென்னை சில்க்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான, அணைப்புதுாரில் உள்ள, 12 ஏக்கர் நிலத்தில், 1,900 மரக்கன்றுகள் நடப்பட்டன. மரக்கன்றுகள் வளர்ந்து, இளம் மரமாக வளர்ந்துள்ள நிலையில், 7 வது திட்டத்தில், அடர் கவின் காடுகள் வளர்க்கும் முயற்சி ஈடேறியுள்ளது.

அவ்வகையில், 130 வகையான, 700 மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி துவங்கியுள்ளது. குங்குமம், வக்கனை, தரணி, கிளர் வளர்த்தி, நீர் கடம்பு, நருவுளி, சூரியகதா, புத்தின் ஜிவி, பொரசு, மலைவேம்பு, ஒவ்வொழி போலியா, தனக்கு, கொஞ்சி, காட்டுக்கொய்யா, செங்கருங்காலி, கொடி அரசு, மழை பூவரசு, அத்து பூவரசு, ஆலமரம், அரசமரம், இலுப்பை, கிருகத்தி, சிலைக்கல் இச்சி உட்பட, 130 வகையான, அரிய வகை மரங்கள் நடவு செய்யப்பட உள்ளன.

இதுகுறித்து தி சென்னை சில்க்ஸ் குழுமத்தை சேர்ந்த பத்மா சிவலிங்கம் கூறியதவாது:இயற்கையை நோக்கி வைக்கும், ஒவ்வொரு அடியிலும் மகிழ்ச்சி கூடுகிறது. வனத்துக்குள் திருப்பூர், அறப்பொருள் வேளாணக வழிகாட்டுதலுடன், மரப்பயிர், நஞ்சில்லா காய்கறிகள், ஆடு, மாடு, கோழி வளர்ப்பு அசத்தலாக செல்கிறது. பசுமைப்பணிக்காக, களப்பணியில் ஈடுபடுவதால், உடலும், மனமும் இலகுவாகிறது. பணம் கொடுக்க முடியாத ஆத்ம திருப்தி, இயற்கை பணியில் கிடைக்கிறது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X