தமிழ்நாடு

தீவிரம்! காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 24 சோதனை சாவடிகள் அமைத்து, போலீசார் கண்காணிப்பு

Added : செப் 30, 2021
Share
Advertisement
ஊரக உள்ளாட்சி தேர்தலில், சட்டம் - ஒழுங்கு பிரச்னையை தடுக்கும் விதமாக, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 24 சோதனை சாவடிகள் அமைத்து, போலீசார் கண்காணித்து வருகின்றனர்.செங்கல்பட்டு மாவட்டத்தில் அச்சிறுப்பாக்கம், மதுராந்தகம், சித்தாமூர், லத்துார், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், காட்டாங்கொளத்துார், புனிததோமையார்மலை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில், ஊரக உள்ளாட்சி
 தீவிரம்!  காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 24 சோதனை சாவடிகள் அமைத்து, போலீசார் கண்காணிப்பு

ஊரக உள்ளாட்சி தேர்தலில், சட்டம் - ஒழுங்கு பிரச்னையை தடுக்கும் விதமாக, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 24 சோதனை சாவடிகள் அமைத்து, போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் அச்சிறுப்பாக்கம், மதுராந்தகம், சித்தாமூர், லத்துார், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், காட்டாங்கொளத்துார், புனிததோமையார்மலை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில், ஊரக உள்ளாட்சி தேர்தல், அக்., 6, 9ம் தேதிகளில், இரண்டு கட்டமாக நடக்கிறது.மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர் என 10 ஆயிரத்து 884 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.இந்த தேர்தலில், சட்டம் - ஒழுங்கு பிரச்னை இல்லாமல் தேர்தல் நடத்த, மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.மாவட்டத்தில் - சட்டம் ஒழுங்கு பிரச்னை, ரவுடிகள் நடமாட்டம், வேட்பாளர்கள் பரிசு பொருட்கள் உள்ளிட்டவற்றை கண்காணிக்காக, இரண்டு தனிப்படை மற்றும் 24 காவல் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 24 மணி நேரமும், போலீசார் பணியில் ஈடுபட வேண்டும் என, போலீஸ் எஸ்.பி., விஜயகுமார் உத்தரவிட்டார்.தவிர திருச்சி, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து, தேர்தல் பணிக்காக, 120 போலீசார் வந்துள்ளனர்.இந்த போலீசாரை பொன்விளைந்தகளத்துார், பட்ராவாக்கம், ஊரப்பாக்கம், மண்ணிவாக்கம் ஆகிய பதற்றமான பகுதிகளில், தலா 30 பேர் என பாதுகாப்பு பணி மற்றும் ரோந்து வாகனங்களில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.செங்கல்பட்டு, மதுராந்தகம், மாமல்லபுரம், வண்டலுார் ஆகிய காவல் துணை கோட்டங்களில் டி.எஸ்.பி.,க்கள் தலைமையிலான போலீசார், ஊராட்சி கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்தல் முறைகேடு நடைபெறாத வண்ணம் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.ஏற்கனவே தாசில்தார்கள் தலைமையில், போலீசாருடன் இணைந்து ஐந்து ஒன்றியங்களுக்கும் மூன்று 'ஷிப்டு'களில் 15 தேர்தல் பறக்கும் படையினர் அமைக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கையாக சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தின் முக்கிய சாலைகள் மற்றும் பகுதிகளில் 34 சோதனைச்சாவடிகள்அமைக்கப்பட்டு உள்ளன.ஒவ்வொரு சோதனைச்சாவடிக்கும், ஐந்து போலீசார் பணியாற்ற உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இரண்டு ஷிப்டுகளில், போலீசார் பணியாற்ற உள்ளனர்.

ஒரு சாவடிக்கு ஐந்து பேர் வீதம், 34 ஓட்டுச்சாவடிக்கு 170 பேர் ஈடுபட்டுள்ளனர்.ஒட்டுமொத்தமாக தேர்தல் பணிகளில், 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளதாக, மாவட்ட எஸ்.பி., சுதாகர் திட்டமிட்டுள்ளார்.எங்கெங்கு சாவடிகள்மாவட்ட எல்லையில் முட்டுக்காடு, நாவலுார், வண்டலுார், கொளத்துார், மேலேச்சேரி, நெல்வாய் கூட்டுச்சாலை, சோத்துப்பாக்கம் ரெட்டிப்பாளையம், அச்சிறுப்பாக்கம் தொழுப்பேடு ஆகிய பகுதிகள்.சிங்கபெருமாள்கோவில், திம்மாவரம், திருப்போரூர் கூட்டுசாலை, தெள்ளிமேடு, கொளப்பாக்கம், கிளாம்பாக்கம், காயரம்பேடு, மாமல்லபுரம், பூஞ்சேரி, கொத்திமங்கலம், கடப்பாக்கம், சித்தாமூர் ஆகிய பகுதிகளில் காவல் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.ஒவ்வொரு சாவடியிலும் ஓர் ஏட்டு மற்றும் இரண்டு ஆயுதப்படை போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள், வாகனங்கள் தணிக்கை மற்றும் பரிசு பொருட்களை கண்டறிந்து மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.ஊராட்சி தலைவர்கள் கொலைகள்செங்கல்பட்டு மாவட்டத்தில், பொன்விளைந்தகளத்துார் ஊராட்சி தலைவர் விஜயகுமார், ஊரப்பாக்கம் ஊராட்சி தலைவர்கள் தி.மு.க.,வின் ஜி.என்.ஆர்.குமார், அ.தி.மு.க.,வின் பெருமாள், பெருமாட்டுநல்லுார் ஊராட்சி தலைவர் சம்பத், மண்ணிவாக்கம் ஊராட்சி தலைவர் அ.தி.மு.க.,வின் புருஷோத்தமன் ஆகியோர், மர்ம நபர்களால், 10 ஆண்டுகளுக்கு முன் கொலை செய்யப்பட்டனர். வீட்டுமனை அங்கீகாரம், மணல், வீடு கட்ட அனுமதி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கொலை செய்யப்பட்டனர்.பறிமுதல் செய்யப்பட்டவைகாஞ்சிபுரம் மாவட்டத்தில், தேர்தல் பறக்கும் படையினர் மூலம், 2.49 லட்சம் ரூபாயும், பித்தளை விளக்கு, சேலை, மது பாட்டில்கள் ஏற்கனவே பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.கடந்த மூன்று நாட்களில், உத்திரமேரூர் பகுதியில், 240 டவல் மற்றும் சேலை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதேபோல், ஸ்ரீபெரும்புதுார் பகுதியில், 83 டவல் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

- நமது நிருபர்கள் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X