பொது செய்தி

தமிழ்நாடு

சம்பாதிக்க வராதீங்க!

Added : செப் 30, 2021
Share
Advertisement
ன்றியம் சூணாம்பேடு ஊராட்சியில், ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர், ஒன்றிய கவுன்சிலருக்கு பலரும் போட்டியிடுகின்றனர். அந்தந்த கட்சியினர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் அப்பகுதி இளைஞர்கள், அறிவிப்பு பதாகை ஒன்றை வைத்து, கட்சியினரை மிரட்சி அடைய வைத்திருக்கின்றனர்.அதில், 'உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று பதவியை பிடிக்கும் எவரும், தாங்கள்

ன்றியம் சூணாம்பேடு ஊராட்சியில், ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர், ஒன்றிய கவுன்சிலருக்கு பலரும் போட்டியிடுகின்றனர். அந்தந்த கட்சியினர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் அப்பகுதி இளைஞர்கள், அறிவிப்பு பதாகை ஒன்றை வைத்து, கட்சியினரை மிரட்சி அடைய வைத்திருக்கின்றனர்.அதில், 'உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று பதவியை பிடிக்கும் எவரும், தாங்கள் தேர்தலில் செலவு செய்யும் பணத்தை, ஊராட்சி வளர்ச்சிக்கான நிதியில் இருந்து எடுத்து விடலாம் என நினைத்து விட வேண்டாம்.'கிராம சபை கூட்டத்தில் முறையாக வரவு - செலவு கணக்குகள் கேட்டும், தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி, ஊழல் நடந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என அறிவித்துள்ளனர்.இம்மாதிரியான வாசகங்கள் அடங்கிய பதாகை, அப்பகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளதோடு, மற்ற ஊராட்சிகளின் வாக்காளர்களையும் இது கவரும் விதமாக உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X