பொது செய்தி

தமிழ்நாடு

ஒரே இடத்துக்கு 4 பேர்

Added : செப் 30, 2021
Share
Advertisement
காஞ்சிபுரம் ஒன்றியம், கருப்படை தட்டடை ஊராட்சி தலைவர் பதவிக்கு, தி.மு.க.,வைச் சேர்ந்த பலர் 'சீட்' கேட்டனர். இதனால் யாருக்கும் 'சீட்' கொடுக்காமல், தலைமை அமைதி காத்தது.இதனால் அதே பகுதியைச் சேர்ந்த பொன்னையன் (எ) வெங்கடேசன், விஜயகுமார், நவீன்குமார், மகேஸ்குமார் ஆகியோர், ஊராட்சி தலைவருக்கு போட்டியிட மனு தாக்கல் செய்து, பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களை எதிர்த்து,

காஞ்சிபுரம் ஒன்றியம், கருப்படை தட்டடை ஊராட்சி தலைவர் பதவிக்கு, தி.மு.க.,வைச் சேர்ந்த பலர் 'சீட்' கேட்டனர். இதனால் யாருக்கும் 'சீட்' கொடுக்காமல், தலைமை அமைதி காத்தது.இதனால் அதே பகுதியைச் சேர்ந்த பொன்னையன் (எ) வெங்கடேசன், விஜயகுமார், நவீன்குமார், மகேஸ்குமார் ஆகியோர், ஊராட்சி தலைவருக்கு போட்டியிட மனு தாக்கல் செய்து, பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களை எதிர்த்து, முன்னாள் ஊராட்சி தலைவர், அ.தி.மு.க.,வைச் சேர்ந்த ரமேஷ் என்பவரும், சுயேச்சை ஒருவரும் போட்டிஇடுகின்றனர்.'தி.மு.க.,வினர் இடையே போட்டி இருப்பதால் அ.தி.மு.க.,விற்கு வெற்றி நிச்சயம்' என, அக்கட்சியினர் உற்சாகத்தில் உள்ளனர்.அதேபோல், 'நான்கு பேர் போட்டியிட்டாலும், தி.மு.க., ஆளுங்கட்சியாக இருப்பதால், யாரேனும் ஒருவர் ஜெயிப்பது நிச்சயம்' என, தி.மு.க.,வினரும் நிச்சயம் செய்கின்றனர்.எது எப்படியோ, ஓர் இடத்துக்கு ஆறு பேர் போட்டியிடுவதால் எங்களுக்கு சந்தோசம் தான் என, அப்பகுதி வாக்காளர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X