பொது செய்தி

தமிழ்நாடு

கோவிலில் வழிபாட்டுக்கு அனுமதி; ஹிந்து முன்னணி வேண்டுகோள்

Added : செப் 30, 2021
Share
Advertisement
திருப்பூர் : ஹிந்துக்களின் புனிதமான புரட்டாசி சனிக்கிழமை வழிபாட்டுக்கு உடனடியாக அரசு அனுமதிக்க வேண்டும் என்று, ஹிந்து முன்னணி வேண்டுகோள் விடுத்துள்ளது.இதுகுறித்து, அதன் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை:வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் வழிபாட்டு தலங்களில், பக்தர்கள் வழிபட அனுமதியில்லை என்று, தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே,

திருப்பூர் : ஹிந்துக்களின் புனிதமான புரட்டாசி சனிக்கிழமை வழிபாட்டுக்கு உடனடியாக அரசு அனுமதிக்க வேண்டும் என்று, ஹிந்து முன்னணி வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து, அதன் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை:வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் வழிபாட்டு தலங்களில், பக்தர்கள் வழிபட அனுமதியில்லை என்று, தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே, கொரோனா தொற்று குறைந்து வருகிறது.அரசு பள்ளிகள், சினிமா தியேட்டர்கள், மால்கள், 'டாஸ்மாக்' மதுக்கடை என, அனைத்துக்கும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது. ஆனால், கோவில், வழிபாடுகளுக்கு மட்டும் கட்டுப்பாடு விதிப்பது நியாயமற்றது.

குறிப்பாக, ஹிந்துக்களின் மிக முக்கியமான, விரதமிருந்து பெருமாளை வணங்கும் புரட்டாசி சனிக்கிழமை அன்று வழிபாட்டை அரசு தடை செய்துள்ளது கண்டனத்துக்குரியது.எனவே, உடனடியாக, கோவில்களை திறந்து கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் தரிசனத்துக்கு வழிவகை செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர் அதில் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X