பொது செய்தி

தமிழ்நாடு

தனி 'பிராண்ட்' அமைத்து 'டிரேட் மார்க்' பெற வேண்டும்! 'டிக்மா' பொதுக்குழுவில் தீர்மானம்

Added : செப் 30, 2021
Share
Advertisement
திருப்பூர் : திருப்பூர் உள்நாட்டு ஆடை உற்பத்தியாளர் சங்க (டிக்மா) முதலாமாண்டு பொதுக்குழு கூட்டம், ராயபுரம் எம்.கே.எம்., ஓட்டலில் நேற்று நடந்தது.'டிக்மா' சங்க செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். துணை செயலாளர் செந்துார்முத்து வரவேற்றார். சங்க தலைவர் பாலசுப்ரமணியம் முன்னிலை வகித்தார்.கழிவு பஞ்சு மீதான ஒரு சதவீத வரியை நீக்கிய தமிழக அரசுக்கும், திருப்பூருக்கென தனி

திருப்பூர் : திருப்பூர் உள்நாட்டு ஆடை உற்பத்தியாளர் சங்க (டிக்மா) முதலாமாண்டு பொதுக்குழு கூட்டம், ராயபுரம் எம்.கே.எம்., ஓட்டலில் நேற்று நடந்தது.'டிக்மா' சங்க செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். துணை செயலாளர் செந்துார்முத்து வரவேற்றார். சங்க தலைவர் பாலசுப்ரமணியம் முன்னிலை வகித்தார்.

கழிவு பஞ்சு மீதான ஒரு சதவீத வரியை நீக்கிய தமிழக அரசுக்கும், திருப்பூருக்கென தனி வணிக வரி கோட்ட அமைக்க நடவடிக்கை எடுத்த எம்.பி., கனிமொழிக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. ஆயத்த ஆடைகளுக்கு ஐந்து சதவீத ஜி.எஸ்.டி., வரி விதிக்கப்படுகிறது.இதனை உயர்த்தக்கூடாது. உறுப்பினர்களாக உள்ள அனைத்து நிறுவனங்களுக்கு தனித்தனி 'பிராண்ட்' அமைத்து, தனி 'டிரேட் மார்க்' பெற முயற்சிக்க வேண்டும், என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சிறப்பு விருந்தினர்களாக 'சைமா' பொது செயலாளர் பொன்னுசாமி, ஆர்பிட்ரேசன் கவுன்சில் தலைவர் கருணாநிதி பங்கேற்றனர்.சங்க துணைத்தலைவர்கள் அபிந்தரா மணி, காருண்யா கார்த்திகேயன், துணை செயலாளர் ராஜேந்திரன், ஒருங்கிணைப்பு குழு தலைவர் நவசரண் முத்துசாமி, வக்கீல்கள் லோகநாதன், சதாசிவம் உட்பட பலர் பங்கேற்றனர். சங்க பொருளாளர் தேவராஜ் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X