சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஊரக வளர்ச்சி அலுவலர் ஆர்ப்பாட்டம்

Added : செப் 30, 2021
Share
Advertisement
திருப்பூர் : ஊராட்சி செயலாளர் இடமாறுதலில், அரசியல் காழ்ப்புணர்ச்சி பார்ப்பதாக, ஊரக வளர்ச்சி அலுவலர் சங்கம் குற்றம்சாட்டி, நேற்று முன்தினம், கலெக்டர் அலுவலகம் முற்றுகை போராட்டம் நடந்தது. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி அலுவலர் சங்கத்தினர், கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருந்தனர். சமாதானம் செய்த போலீசார், கலெக்டரை சந்திக்க, ஐந்து நிர்வாகிகளை மட்டும்

திருப்பூர் : ஊராட்சி செயலாளர் இடமாறுதலில், அரசியல் காழ்ப்புணர்ச்சி பார்ப்பதாக, ஊரக வளர்ச்சி அலுவலர் சங்கம் குற்றம்சாட்டி, நேற்று முன்தினம், கலெக்டர் அலுவலகம் முற்றுகை போராட்டம் நடந்தது.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி அலுவலர் சங்கத்தினர், கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருந்தனர். சமாதானம் செய்த போலீசார், கலெக்டரை சந்திக்க, ஐந்து நிர்வாகிகளை மட்டும் அழைத்துச்சென்றனர்.நிர்வாகிகள், கலெக்டர் அறை முன் உள்ள, காத்திருப்போர் அறையில் காத்திருந்தனர். ஆய்வு கூட்டத்தில் இருந்த கலெக்டர் வினீத், கூட்டம் முடிந்ததும், கிளம்பி சென்றுவிட்டார். கலெக்டரை சந்திக்க காத்திருந்த நிர்வாகிகள், அதிர்ச்சி அடைந்து, திரும்பினர்.

இதனால், கலெக்டரை கண்டித்தும், கோரிக்கையை வலியுறுத்தியும் நேற்று, வெளிநடப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.மாலை, 4:45 மணி முதல், 5:45 வரை, பணியில் இருந்து வெளிநடப்பு செய்து, கோரிக்கையை வலியுறுத்தி, கலெக்டர் அலுவலகம் மற்றும் அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X