பொது செய்தி

தமிழ்நாடு

மீட்கப்பட்ட ஆண் குழந்தை; தத்து மையத்தில் பராமரிப்பு

Added : செப் 30, 2021
Share
Advertisement
திருப்பூர் : தலைமை தபால் நிலையம் அருகே மீட்கப்பட்ட, 9.50 மாத ஆண் குழந்தை, சேலம் தத்து மையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.திருப்பூர் தலைமை தபால் நிலையம் அருகே, கைவிடப்பட்ட நிலையில் இருந்த, 9.50 மாத ஆண் குழந்தையை, வடக்கு போலீசார் மீட்டு, அரசு தலைமை மருத்துவமனையில் ஒப்படைத்தனர். சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், 21ம் தேதி குழந்தை மருத்துவமனையில் இருந்து, குழந்தைகள் பாதுகாப்பு குழு

திருப்பூர் : தலைமை தபால் நிலையம் அருகே மீட்கப்பட்ட, 9.50 மாத ஆண் குழந்தை, சேலம் தத்து மையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் தலைமை தபால் நிலையம் அருகே, கைவிடப்பட்ட நிலையில் இருந்த, 9.50 மாத ஆண் குழந்தையை, வடக்கு போலீசார் மீட்டு, அரசு தலைமை மருத்துவமனையில் ஒப்படைத்தனர். சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், 21ம் தேதி குழந்தை மருத்துவமனையில் இருந்து, குழந்தைகள் பாதுகாப்பு குழு முன் ஒப்படைக்கப்பட்டது.

தற்காலிகமாக, சேலம் 'லைப் லைன்' தத்து மையத்தில் குழந்தை பராமரிப்புக்காக ஒப்படைக்கப்பட்டு, மித்ரன் என பெயரிடப்பட்டுள்ளது.குழந்தை குறித்து தகவல் தெரிந்தவர்கள், 30 நாட்களுக்குள், தாராபுரம் ரோடு, கரட்டாங்காடு பஸ் ஸ்டாப் அருகே உள்ள, குழந்தைகள் நலக்குழுவை, 0421 2424416; குழந்தைகள் பாதுகாப்பு அலகை, 0421 2971198; சேலம் தத்து மையத்தை, 94432 11223 என்ற எண்களிலும் தொடர்புகொள்ளலாம் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X