பாசிப்பயறு கிலோ ரூ.72.75 க்கு விவசாயிகளிடம் கொள்முதல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பாசிப்பயறு கிலோ ரூ.72.75 க்கு விவசாயிகளிடம் கொள்முதல்

Added : செப் 30, 2021
Share
மதுரை : ''மதுரை மாவட்டத்தில் 2021-22 காரீப் பருவத்தில் விவசாயிகளிடம் பாசிப்பயறு கிலோ ஒன்றுக்கு ரூ.72.75 க்கு அக்., 1 முதல் டிச., 28 வரை கொள்முதல் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது'' என கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்தார்.அவர் கூறியுள்ளதாவது: விவசாயிகள் விளைவித்த பாசிப்பயிறை நன்கு சுத்தம் செய்து உலர்த்தி திருமங்கலம், உசிலம்பட்டி ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் ஒப்படைத்து இந்த விலையை

மதுரை : ''மதுரை மாவட்டத்தில் 2021-22 காரீப் பருவத்தில் விவசாயிகளிடம் பாசிப்பயறு கிலோ ஒன்றுக்கு ரூ.72.75 க்கு அக்., 1 முதல் டிச., 28 வரை கொள்முதல் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது'' என கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்தார்.

அவர் கூறியுள்ளதாவது: விவசாயிகள் விளைவித்த பாசிப்பயிறை நன்கு சுத்தம் செய்து உலர்த்தி திருமங்கலம், உசிலம்பட்டி ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் ஒப்படைத்து இந்த விலையை பெறலாம். நிலத்திற்கான சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை, வங்கி கணக்கு பாஸ்புத்தகம் நகலுடன் விற்பனை கூடங்களில் பதிவு செய்யலாம்.

பதிவு செய்தவர்களிடம் இருந்து மட்டுமே பாசிப்பயறு கொள்முதல் செய்யப்படும்.ஈரப்பதம், இதர பொருட்களின் கலப்பு, இதர தானியங்களின் கலப்பு,சேதமடைந்த பயறு, சுருங்கிய பயறு, வண்டு தாக்கிய பயறு ஆகியவற்றை தரப்பரிசோதனை செய்து கொள்முதல் அனுமதிக்கப்படும். கொள்முதல் தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.விவரங்களுக்கு திருமங்கலம் பகுதியினர் 90251 52075, உசிலம்பட்டி பகுதியினர் 70102 80754 ல் தொடர்பு கொள்ளலாம். வட்டார வேளாண் விற்பனை உதவி வேளாண் அலுவலர், வேளாண் உதவி இயக்குனர் அலுவலகங்களையும் தொடர்பு கொள்ளலாம் என கூறியுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X