பொது செய்தி

தமிழ்நாடு

202 தேர்தல் அறிக்கையும் அறிவிப்புதான் முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேச்சு

Added : செப் 30, 2021
Share
Advertisement
திருமங்கலம் : மதுரை மாவட்ட ஊராட்சி 16 வார்டு இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர் தமிழழகனை ஆதரித்து செக்கானூரணி, கிண்ணிமங்கலம் பகுதிகளில் முன்னாள் அமைச்சர் உதயகுமார் பிரசாரம் செய்தார்.அவர் பேசியதாவது: கடந்த சட்டசபை தேர்தலில் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ. ஆயிரம், காஸ் மானியம் ரூ.100 என்பது உட்பட 505 தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க., வினர் கொடுத்தனர். இது குறித்து

திருமங்கலம் : மதுரை மாவட்ட ஊராட்சி 16 வார்டு இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர் தமிழழகனை ஆதரித்து செக்கானூரணி, கிண்ணிமங்கலம் பகுதிகளில் முன்னாள் அமைச்சர் உதயகுமார் பிரசாரம் செய்தார்.அவர் பேசியதாவது:

கடந்த சட்டசபை தேர்தலில் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ. ஆயிரம், காஸ் மானியம் ரூ.100 என்பது உட்பட 505 தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க., வினர் கொடுத்தனர். இது குறித்து சட்டசபையில் நாங்கள் 'ஸ்டாலின் அண்ணாச்சி நீங்கள் சொன்னது என்ன ஆச்சு' என கேள்வி கேட்டோம். இதற்கு பதில் எதுவும் அவர்கள் சொல்லவில்லை.ஆனால் தற்போது 202 தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளதாக கூறி வருகின்றனர்.

அது நிறைவேற்றப்படவில்லை. அனைத்தும் வெறும் அறிவிப்புதான். நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்கு தெரியும் என தேர்தலின்போது கூறினர். ஆனால் தற்போது அ.தி.மு.க., அரசு கொண்டு வந்த சட்ட மசோதாவை தான் தி.மு.க.,வும் கொண்டு வந்துள்ளது என்றார்.எம்.எல்.ஏ., அய்யப்பன், ஜெ., பேரவை மாநில துணைச்செயலாளர் வெற்றிவேல், வழக்கறிஞர் பிரிவு செயலாளர் தமிழ்ச்செல்வம், ஒன்றிய செயலாளர் அன்பழகன் மற்றும் கட்சியினர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X