பொது செய்தி

தமிழ்நாடு

தவமாய் தவமிருந்து சான்றிதழ் பெற்ற மாணவி

Added : செப் 30, 2021
Share
Advertisement
மதுரை : மதுரை காமராஜ் பல்கலையில் பட்டப்படிப்பு சான்றிதழ் வழங்க இழுத்தடிக்கப்பட்டதால் மனமுடைந்த மாணவி அங்குள்ள திருவள்ளுவர் சிலை முன் கண்களை மூடி தவப் போராட்டம் நடத்தினார்.உசிலம்பட்டி நிவேதா, பல்கலை தொலைநிலைக் கல்வி திட்டத்தில் எம்.ஏ., தமிழ் முடித்தார். அனைத்து கட்டணமும் செலுத்தி சான்றிதழ் கேட்டு 3 மாதங்களுக்கும் மேலாக அலைந்தார். கிடைத்தபாடில்லை. இதனால் மனமுடைந்து

மதுரை : மதுரை காமராஜ் பல்கலையில் பட்டப்படிப்பு சான்றிதழ் வழங்க இழுத்தடிக்கப்பட்டதால் மனமுடைந்த மாணவி அங்குள்ள திருவள்ளுவர் சிலை முன் கண்களை மூடி தவப் போராட்டம் நடத்தினார்.

உசிலம்பட்டி நிவேதா, பல்கலை தொலைநிலைக் கல்வி திட்டத்தில் எம்.ஏ., தமிழ் முடித்தார். அனைத்து கட்டணமும் செலுத்தி சான்றிதழ் கேட்டு 3 மாதங்களுக்கும் மேலாக அலைந்தார். கிடைத்தபாடில்லை. இதனால் மனமுடைந்து பதிவாளர் அலுவலகம் முன் உள்ள திருவள்ளுவர் சிலை முன் கண்களை மூடி தவமிருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டார்.அவர் கூறுகையில் “டி.ஆர்.பி., தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளேன். ஆனால் பட்டம் மற்றும் மதிப்பெண் சான்று கேட்டால் தேர்வாணையர் கையெழுத்திடவில்லை, இயக்குனர் வேலையாக உள்ளார் எனக்கூறி அலைக்கழிக்கின்றனர்” என்றார்.அம்மாணவியை பதிவாளர் வசந்தா அழைத்து விசாரித்தார். உடனடியாக அலுவலர்களை வரச்செய்து மாலையில் சான்றிதழ் வழங்கி அனுப்பி வைத்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X