பொது செய்தி

தமிழ்நாடு

பெரியார் பஸ் ஸ்டாண்ட் விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்

Added : செப் 30, 2021
Share
Advertisement
மதுரை : மதுரை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.167.06 கோடியில் கட்டப்பட்ட பெரியார் பஸ் ஸ்டாண்ட் விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என ஆய்வு செய்த கமிஷனர் கார்த்திகேயன் தெரிவித்தார்.இங்கு பயணிகள் காத்திருக்க இடம், போலீஸ், போக்குவரத்து, பாலுாட்டும் அறைகள், கழிப்பறை, லிப்ட் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. பஸ் நிறுத்த பகுதிகள், தரைத் தளம் கீழ் 2 தளங்கள், 4 அடுக்கு

மதுரை : மதுரை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.167.06 கோடியில் கட்டப்பட்ட பெரியார் பஸ் ஸ்டாண்ட் விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என ஆய்வு செய்த கமிஷனர் கார்த்திகேயன் தெரிவித்தார்

.இங்கு பயணிகள் காத்திருக்க இடம், போலீஸ், போக்குவரத்து, பாலுாட்டும் அறைகள், கழிப்பறை, லிப்ட் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. பஸ் நிறுத்த பகுதிகள், தரைத் தளம் கீழ் 2 தளங்கள், 4 அடுக்கு மாடிகளில் கடைகளுடன் வணிக வளாகம், மழைநீர் வடிகால் அமைகிறது. கட்டுமானம், மாநகராட்சி பொறியாளர்கள், போலீசார், போக்குவரத்து அலுவலர்களுடன் ஆலோசனை செய்த கமிஷனர் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.நகர் பொறியாளர் (பொ) சுகந்தி, செயற்பொறியாளர் கருப்பாத்தாள்,போக்குவரத்து துணை கமிஷனர் ஈஸ்வரன், போக்குவரத்து கழக பொது மேலாளர் இளங்கோவன், துணை மேலாளர் ரவிக்குமார், நடராஜன், உதவி கமிஷனர் சுரேஷ்குமார், உதவி செயற்பொறியாளர்கள் மனோகரன், ஆரோக்கிய சேவியர், உதவிப் பொறியாளர் ஆறுமுகம், பி.ஆர்.ஓ., மகேஸ்வரன். உடனிருந்தனர்.என்னது மறுபடியும் முதல்ல இருந்தா...இதேபோல் ஆக., 26ல் இங்கு ஆய்வு செய்த மாநகராட்சி அதிகாரிகள், எம்.பி., சு.வெங்கடேசன் 'ஒரு மாதத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும்' என தெரிவித்தனர். அதன்படி செப்., 25 உடன் ஒரு மாதம் முடிந்தது.

ஆனால், பஸ் ஸ்டாண்ட் திறக்கப்படவில்லை. 'பெரியார் பஸ் ஸ்டாண்டில் இனிமேல் தான் இருக்கு இடியாப்ப சிக்கல்' என தினமலர் சுட்டிக்காட்டிய போக்குவரத்து நெரிசல், பஸ் நிறுத்தம் குறித்த பிரச்னைகளுக்கு தீர்வு காண திட்டமிடவில்லை.இந்நிலையில் பரோட்டா சூரி காமெடி போல் 'நீங்க எல்லா கோட்டையும் அழிங்க... மறுபடியும் முதல்ல இருந்து வாங்க...' என்பது போல் விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X