பொது செய்தி

தமிழ்நாடு

தினமலர் செய்தியால் கொள்முதல் செய்யப்பட்ட நெல்

Added : செப் 30, 2021
Share
Advertisement
திருப்பரங்குன்றம் : தினமலர் செய்தி எதிரொலியாக மதுரை நிலையூரில் 5 நாட்களுக்கு மேலாக அரசு கொள்முதலுக்காக காத்திருந்த நெல் நேற்று கொள்முதல் செய்யப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.நிலையூரை சுற்றி 100க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் அறுவடை செய்யப்பட்டு அரசு கொள்முதலுக்காக களத்தில் குவிக்கப்பட்டிருந்தது. அவற்றை கொள்முதல் செய்ய அதிகாரிகளுக்கு விவசாயிகள்

திருப்பரங்குன்றம் : தினமலர் செய்தி எதிரொலியாக மதுரை நிலையூரில் 5 நாட்களுக்கு மேலாக அரசு கொள்முதலுக்காக காத்திருந்த நெல் நேற்று கொள்முதல் செய்யப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நிலையூரை சுற்றி 100க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் அறுவடை செய்யப்பட்டு அரசு கொள்முதலுக்காக களத்தில் குவிக்கப்பட்டிருந்தது. அவற்றை கொள்முதல் செய்ய அதிகாரிகளுக்கு விவசாயிகள் பலமுறை கோரிக்கை வைத்தும் பலன் இல்லை. மழை பெய்துவிட்டால் நெல் மணிகள் நனைந்து முளைத்தோ, அழுகியோ வீணாகிவிடும். அவற்றை விற்க முடியாது. விவசாயிகளுக்கு பெரிதும் நஷ்டம் ஏற்படும். அவற்றை கொள்முதல் செய்ய அதிகாரிகள் முன்வர வேண்டும் என நேற்று தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டது.

இதுகுறித்து விவசாயிகள் திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ., ராஜன்செல்லப்பா, கூத்தியார் குண்டு கூட்டுறவு கடன் சங்க தலைவர் முருகன், கலெக்டருக்கு தகவல் தெரிவித்திருந்தனர். நேற்று அதிகாரிகள் கொள்முதல் செய்தனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X