அரசியல் செய்தி

தமிழ்நாடு

காவல் நிலையத்தில் எஸ்.ஐ., இருக்கையில் அமர்ந்து முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு

Updated : செப் 30, 2021 | Added : செப் 30, 2021 | கருத்துகள் (57)
Share
Advertisement
தர்மபுரி : தர்மபுரி சென்றிருந்த முதல்வர் ஸ்டாலின், அதியமான் கோட்டை காவல் நிலையத்தில், நேற்றிரவு திடீர் ஆய்வு நடத்தினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, முதல்வர் ஸ்டாலின் நேற்று சேலம் வருகை தந்தார். தொடர்ந்து தனது நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்ட அவர், இரவு காரில் தர்மபுரி கிளம்பி சென்றார். அதியமான் கோட்டையில் கூடியிருந்த
DMK, MK Stalin, Stalin, Tamil Nadu CM, CM Stalin, ஸ்டாலின், திமுக

தர்மபுரி : தர்மபுரி சென்றிருந்த முதல்வர் ஸ்டாலின், அதியமான் கோட்டை காவல் நிலையத்தில், நேற்றிரவு திடீர் ஆய்வு நடத்தினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, முதல்வர் ஸ்டாலின் நேற்று சேலம் வருகை தந்தார். தொடர்ந்து தனது நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்ட அவர், இரவு காரில் தர்மபுரி கிளம்பி சென்றார். அதியமான் கோட்டையில் கூடியிருந்த மக்கள் அவருக்கு வரவேற்பு அளித்தனர். அப்போது திடீரென அதியமான் கோட்டை காவல் நிலையத்திற்குள் ஸ்டாலினின் கார் சென்றது.


latest tamil news



latest tamil news


காரிலிருந்து இறங்கிய ஸ்டாலின், காவல் நிலையத்திற்குள் சென்று, எஸ்.ஐ.,யின் இருக்கையில் அமர்ந்து ஆய்வு மேற்கொண்டார். காவல் நிலையத்திற்கு வந்த புகார்கள் குறித்தும், அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் கேட்டறிந்தார். மேலும், போலீசாருக்கு வார விடுப்பு சரியாக அமல்படுத்தப்படுகிறதா என்றும் கேட்டறிந்த ஸ்டாலின், போலீசாரின் குறைகள், கோரிக்கைகளை கேட்டறிந்தார். சுமார் 10 நிமிடங்களுக்கு பின் அவர் காவல் நிலையத்திலிருந்து கிளம்பி சென்றார். இதனால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (57)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DVRR - Kolkata,இந்தியா
06-அக்-202116:41:06 IST Report Abuse
DVRR நான் முதல்வர் சீட்டுக்கு லாயக்கில்லாதவன் என்று எவ்வளவு வெளிப்படையாக காண்பிக்கின்றார் பாருங்கள்
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
03-அக்-202106:10:47 IST Report Abuse
NicoleThomson முதல் படத்தில் முதல்வரின் பாதுகாப்பு அதிகாரியின் கையில் "துண்டுசீட்டு"
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
03-அக்-202103:41:33 IST Report Abuse
meenakshisundaram அடுத்த அதிகாரியின் நாற்காலியில் உட்கார்வது நல்ல 'பண்பு ' அல்ல .அப்போ முதல்வர் நாற்காலியில் அடுத்தவர் உட்காரலாமா ?-விளம்பரம் 'முத்தி போச்சு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X