கோர்ட் செய்தி

தமிழ்நாடு

தமிழக லோக் ஆயுக்தா சட்டத்தை ரத்து செய்ய வழக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

Added : செப் 30, 2021
Share
Advertisement
மதுரை : தமிழக லோக்ஆயுக்தா சட்டத்தை ரத்து செய்ய தாக்கலான வழக்கில் அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.திருச்சி துறையூர்குருநாதன் தாக்கல் செய்த மனு:பொது ஊழியர்கள், அமைச்சர்கள், முதல்வர், எம்.பி.,-எம்.எல்.ஏ.,க்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க மத்திய அரசு லோக்பால் மற்றும் லோக்ஆயுக்தா சட்டத்தை 2013 ல் கொண்டுவந்தது. இதைப் பின்பற்றி தமிழக அரசு 2018 ல்

மதுரை : தமிழக லோக்ஆயுக்தா சட்டத்தை ரத்து செய்ய தாக்கலான வழக்கில் அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

திருச்சி துறையூர்குருநாதன் தாக்கல் செய்த மனு:பொது ஊழியர்கள், அமைச்சர்கள், முதல்வர், எம்.பி.,-எம்.எல்.ஏ.,க்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க மத்திய அரசு லோக்பால் மற்றும் லோக்ஆயுக்தா சட்டத்தை 2013 ல் கொண்டுவந்தது. இதைப் பின்பற்றி தமிழக அரசு 2018 ல் லோக்ஆயுக்தா சட்டம் கொண்டுவந்தது.பிரதமருக்கு எதிரான ஊழல் புகாரை மத்திய அரசின் லோக்பால் அமைப்பு விசாரிக்க வழிவகை உள்ளது. மத்திய அரசின் சட்டப்படி ஒவ்வொரு பொது ஊழியரும் ஆண்டுதோறும் சொத்து மற்றும் கடன் விபரங்களை அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும்.அதை இணையதளத்தில் வெளியிட வேண்டும்.

இதன் மூலம் சொத்து அதிகரித்துள்ளதா அல்லது குறைந்துள்ளதா என மக்கள் அறிய முடியும்.லோக்பால் தலைவர், உறுப்பினர்கள் தேர்வுக்குழுவில் பிரதமர், லோக்சபா சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, சட்ட நிபுணர் இடம்பெற்றுள்ளனர். தமிழக லோக்ஆயுக்தா அமைப்பு தலைவர், உறுப்பினர்கள் தேர்வுக்குழுவில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, சட்ட நிபுணர் இடம்பெறவில்லை.மத்திய சட்டப்படி ஆரம்பகட்ட விசாரணை நடத்த தனி பிரிவு உள்ளது.மாநிலத்தில் அதுபோன்ற பிரிவு இல்லை. மத்திய சட்டப்படி ஊழல் செய்த அதிகாரிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்ய லோக்பாலுக்கு அதிகாரம் உள்ளது.

மாநில லோக்ஆயுக்தாவிற்கு அதுபோன்ற அதிகாரம் இல்லை.லோக்ஆயுக்தா அதிகார வரம்பிற்குள் முதல்வர் வரமாட்டார்; விலக்களிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தத்தில் லோக்ஆயுக்தா சட்டம் அதிகாரமற்றதாக உள்ளது. அதை வலுவானதாக மாற்ற சட்டத்திருத்தம் மேற்கொள்ள தமிழக அரசுக்கு மனு அனுப்பினேன். தமிழக லோக்ஆயுக்தா சட்டம் செல்லாது என உத்தரவிட வேண்டும்.இவ்வாறு குருநாதன் மனு செய்தார்.நீதிபதிகள் எம்.துரைசுவாமி, கே.முரளிசங்கர் அமர்வு தமிழக தலைமைச் செயலாளர், பணியாளர் நலன் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலாளர், சட்டத்துறை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு 12 வாரங்கள் ஒத்திவைத்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X