பொது செய்தி

தமிழ்நாடு

வேளாண் பல்கலை துணைவேந்தர் உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

Added : செப் 30, 2021
Share
Advertisement
மதுரை : வேளாண் பல்கலை துணைவேந்தர் நியமன தகுதி நிர்ணயத்திற்கு எதிரான வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. தஞ்சாவூர் சுரேஷ் தாக்கல் செய்த பொதுநல மனு:வேளாண்மை முதுகலை பட்டம், பி.எச்.டி.,முடித்துள்ளேன். அரசுத் துறைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றேன். கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலை துணைவேந்தர் நியமனத்திற்கு தகுதிகள் நிர்ணயித்து


மதுரை : வேளாண் பல்கலை துணைவேந்தர் நியமன தகுதி நிர்ணயத்திற்கு எதிரான வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. தஞ்சாவூர் சுரேஷ் தாக்கல் செய்த பொதுநல மனு:வேளாண்மை முதுகலை பட்டம், பி.எச்.டி.,முடித்துள்ளேன்.

அரசுத் துறைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றேன். கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலை துணைவேந்தர் நியமனத்திற்கு தகுதிகள் நிர்ணயித்து தமிழக வேளாண்துறை 2018ல் அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி வேளாண்மையில் பட்டம், பி.எச்.டி., முடித்திருக்க வேண்டும். பல்கலையில் பேராசிரியராக 10 ஆண்டுகள், நிர்வாக ரீதியாக டீன், துறைத்தலைவராக 6 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும். 10 ஆராய்ச்சி கட்டுரைகள் வெளியிட்டிருக்க வேண்டும்.

பி.எச்.டி.,படிப்பில் 5 மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்திருக்க வேண்டும். மதுரை, கோவை வேளாண் கல்லுாரிகளில் மட்டுமே பி.எச்.டி.,படிப்புகள் உள்ளன. மற்ற வேளாண் கல்லுாரிகளில் இல்லை. இதனால் அக்கல்லுாரிகளின் பேராசிரியர்கள் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பிக்க இயலாது.பி.எச்.டி.,படிப்பில் 5 மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்திருக்க வேண்டும்; 10 ஆராய்ச்சி கட்டுரைகள் வெளியிட்டிருக்க வேண்டும் என்ற தகுதிகள் ஏற்புடையதல்ல. இதை பல்கலை கல்விக் கவுன்சிலின் ஒப்புதல் இன்றி தன்னிச்சையாக நிர்ணயிக்க முடியாது.

இரு தகுதிகளையும் ரத்து செய்ய வேண்டும். வேளாண் பல்கலையின் தற்போதைய துணைவேந்தர் பதவி நவம்பரில் முடிகிறது. புதிய துணைவேந்தர் நியமனத்திற்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு சுரேஷ் குறிப்பிட்டார்.நீதிபதிகள் எம்.துரைசுவாமி, கே.முரளிசங்கர் அமர்வு விசாரித்தது. தமிழக அரசுத்தரப்பு,'புதிய துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான நடைமுறை துவங்கவில்லை,' என தெரிவித்தது.நீதிபதிகள் வேளாண்துறை செயலாளர், வேளாண் பல்கலை துணைவேந்தர், பதிவாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு அக்.,27க்கு ஒத்திவைத்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X