பொது செய்தி

இந்தியா

எல்லை பாதுகாப்பில் திபெத்தியர்கள்; புத்த பிட்சுக்களிடம் ஆசி கேட்கும் சீனா

Updated : செப் 30, 2021 | Added : செப் 30, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
புதுடில்லி: இந்திய - திபெத் எல்லையில் பாதுகாப்பு பணி வீரர்களை நியமிக்கும் திட்டத்திற்கு புத்த பிட்சுக்களிடம் சீன ராணுவம் ஆசி கோரியதாக தகவல் வெளியாகி உள்ளது.கடந்த ஆண்டு கிழக்கு லடாக் எல்லையில் சீனாவின் ஆக்கிரமிப்பு முயற்சியை இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தியது. இரு தரப்பும் படைகளைக் குவித்தன. அப்போது 15 ஆயிரம் அடிக்கு மேல் அமைந்துள்ள லடாக் எல்லை பகுதியில் நிலவும்
China, Indo Tibet, buddhist

புதுடில்லி: இந்திய - திபெத் எல்லையில் பாதுகாப்பு பணி வீரர்களை நியமிக்கும் திட்டத்திற்கு புத்த பிட்சுக்களிடம் சீன ராணுவம் ஆசி கோரியதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த ஆண்டு கிழக்கு லடாக் எல்லையில் சீனாவின் ஆக்கிரமிப்பு முயற்சியை இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தியது. இரு தரப்பும் படைகளைக் குவித்தன. அப்போது 15 ஆயிரம் அடிக்கு மேல் அமைந்துள்ள லடாக் எல்லை பகுதியில் நிலவும் பனிப் பொழிவு கடும் குளிர் ஆகியவை காரணமாக ஏராளமான சீன வீரர்கள் காய்ச்சலில் அவதிப்பட்டனர்.


latest tamil news



இதைத் தொடர்ந்து மிக உயரமான மலைச் சிகரங்களில் லாவகமாக செல்லக் கூடிய கடும் பனிப் பொழிவையும் தாங்கும் ஆற்றல் உள்ள திபெத்தியர்களை இந்திய - திபெத் எல்லையோர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த சீனா முடிவு செய்தது.அதன்படி சிறப்பு திபெத் ராணுவ பிரிவுகளை சீன ராணுவம் உருவாக்கி உள்ளது.

இப்பிரிவுகளுக்கு ஆசி வழங்குமாறு புத்த பிட்சுக்களை சீன ராணுவத்தினர் கேட்டுக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.இதற்காக திபெத் அரசு மற்றும் மதத் தலைவர் தலாய் லாமாவை ஆதரிப்போர் தவிர்த்து மற்றவர்களை பாதுகாப்பு பணியில் சீனா நியமித்து வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தத்வமசி - சென்னை ,இந்தியா
30-செப்-202113:02:08 IST Report Abuse
தத்வமசி நேருவின் தவறினால் சீனா திபெத்தை கபளீகரம் செய்தது. அப்போதே நேரு அதை தடுத்திருக்க வேண்டும். நேருவின் பல ராஜீய தவறுகளில் இதுவும் ஒரு இமாலய தவறு.
Rate this:
Cancel
R. SUKUMAR CHEZHIAN - chennai,இந்தியா
30-செப்-202110:10:26 IST Report Abuse
R. SUKUMAR CHEZHIAN சீனாவிடம் இருந்து திபெத் சீக்கிரம் விடுதலை அடைய வாழ்த்துகள்.
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
30-செப்-202109:48:02 IST Report Abuse
RajanRajan PLEASE AVOID MULTIPLE ENTRY OF THE SAME COMMENT
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X