உடனடியாக செயற்குழு கூட்டத்தை கூட்டுங்கள்: சோனியாவுக்கு குலாம் நபி கடிதம்

Updated : செப் 30, 2021 | Added : செப் 30, 2021 | கருத்துகள் (21)
Share
Advertisement
புதுடில்லி : காங்கிரஸ் கட்சியின் தற்போதைய நிலை குறித்து விவாதிக்க உடனடியாக செயற்குழு கூட்டத்தை கூட்டுமாறு, தற்காலிக தலைவர் சோனியாவுக்கு மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கடிதம் எழுதி உள்ளார்.பஞ்சாப் காங்.கில் உட்கட்சி பூசல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. மாநில தலைவர் பதவியில் இருந்து நவ்ஜோத் சிங் சித்து ராஜினாமா செய்துள்ளார். முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் மத்திய
Congress, Ghulam Nabi Azad, Sonia Gandhi, Top Congress Panel Meeting, Sonia

புதுடில்லி : காங்கிரஸ் கட்சியின் தற்போதைய நிலை குறித்து விவாதிக்க உடனடியாக செயற்குழு கூட்டத்தை கூட்டுமாறு, தற்காலிக தலைவர் சோனியாவுக்கு மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கடிதம் எழுதி உள்ளார்.

பஞ்சாப் காங்.கில் உட்கட்சி பூசல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. மாநில தலைவர் பதவியில் இருந்து நவ்ஜோத் சிங் சித்து ராஜினாமா செய்துள்ளார். முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசியுள்ளார்.


latest tamil news


கோவா முன்னாள் முதல்வர் லுாயிசினோ பெலேரோ கேரளாவின் மூத்த காங். தலைவர் வி.எம்.சுதீரன் உள்ளிட்ட பலர் கட்சியில் இருந்து விலகி உள்ளனர். பல்வேறு மாநிலங்களிலும் கட்சி பின்னடைவை சந்தித்து வருவதை அடுத்து உடனடியாக செயற்குழு கூட்டத்தை கூட்டி கட்சியின் நிலை குறித்து விவாதிக்குமாறு மூத்த காங். தலைவர் குலாம் நபி ஆசாத் தற்காலிக தலைவர் சோனியாவுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

'அனைத்து கட்சி பதவிகளுக்கும் தேர்தல் நடத்தி கட்சியை மறுசீரமைப்பு செய்ய வேண்டும்' என தலைமையிடம் வலியுறுத்தி வரும் அதிருப்தி தலைவர்கள் குழுவான 'ஜி - 23'க்கு குலாம் நபி தலைமை வகித்து வருகிறார்.

Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - Kanchipuram,இந்தியா
30-செப்-202117:22:36 IST Report Abuse
raja காரிய கமிட்டி உறுப்பினர்கள் ஒன்று கூடி இப்போதைய தலைவர் சோனியாவை நீக்கிவிட்டு புதிய துடிப்பான தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும். நாட்டை காப்பாற்ற நல்ல தலைவர் தேவை
Rate this:
Cancel
vnatarajan - chennai,இந்தியா
30-செப்-202116:18:51 IST Report Abuse
vnatarajan காங்கிரஸ் தற்போது ஆணி வேர் இல்லாத ஆலமரமாக நிற்கிறது அதன் இலைகள் (தொண்டர்கள்} எல்லாம் எப்போதோ உதிர்ந்துவிட்டன . சில கிளைகள் (பதவிகளில் இருப்பவர்கள்} மட்டும் ஒட்டிக்கொண்டு இருக்கின்றன. ராகுல் ஏற்கனவே தலைவர் பதவியில் இருந்துவிட்டு கட்சியை நடத்தமுடியாமல் தாயிடம் பொறுப்பை கொடுத்துவிட்டு ஓடிவிட்டார். தற்காலிக தலைவராக இருக்கும் சோனியாவுக்கோ மக்களிடம் செல்வாக்கு கிடையாது. செயற்குழு கூட்டத்தையும் நடத்தாமல் கட்சி பதவிகளையும் தேர்தல் நடத்தி நிரப்பாமல் காலம் கடத்தினால் காங்கிரஸ் இருந்த சுவடு தெரியாமல் அழிந்துவிடும். சோனியா காங்கிரஸ் கட்சிக்கு மங்களம் பாடிவிடுவார்போல் தோன்றுகிறது.
Rate this:
Cancel
SUBBU - MADURAI,இந்தியா
30-செப்-202116:13:18 IST Report Abuse
SUBBU காங்கிரஸ் இல்லாத இந்தியா,திராவிடம் இல்லாத தமிழகம் விரைவில்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X