பொது செய்தி

இந்தியா

ஆன்லைனில் 100 ரூபாய்க்கு தங்கம்; கடைக்காரர்கள் முயற்சி

Updated : செப் 30, 2021 | Added : செப் 30, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
புதுடில்லி : கொரோனா பாதிப்புக்கு பின், இந்தியாவில் உள்ள நகைக்கடைக்காரர்கள், தங்களுடைய பாரம்பரிய வணிக முறைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதையடுத்து, ஆன்லைன் வாயிலாக 100 ரூபாய்க்கு கூட தங்கத்தை விற்க தயாராகி உள்ளனர். கடந்த ஆண்டு, ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக, தங்க நகைகள் விற்பனை கடுமையான பாதிப்பை சந்தித்தன. இப்போது ஆன்லைன்

புதுடில்லி : கொரோனா பாதிப்புக்கு பின், இந்தியாவில் உள்ள நகைக்கடைக்காரர்கள், தங்களுடைய பாரம்பரிய வணிக முறைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.latest tamil newsஇதையடுத்து, ஆன்லைன் வாயிலாக 100 ரூபாய்க்கு கூட தங்கத்தை விற்க தயாராகி உள்ளனர். கடந்த ஆண்டு, ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக, தங்க நகைகள் விற்பனை கடுமையான பாதிப்பை சந்தித்தன. இப்போது ஆன்லைன் வாயிலான விற்பனை முயற்சியில் நகைக்கடைகள் இறங்கி உள்ளன.

'டாடா' குழுமத்தைச் சேர்ந்த, 'தனிஷ்க்' துவங்கி, பல உள்நாட்டு தங்கநகை விற்பனையாளர்கள், டிஜிட்டல் தங்க தளத்துடன் கூட்டு வைத்து, ஆன்லைன் வாயிலாக 100 ரூபாய் என்ற மிகக் குறைந்த தொகைக்கு கூட, தங்கத்தை விற்பனை செய்ய துவங்கி உள்ளனர். நுகர்வோர், குறைந்தபட்சம் 1 கிராம் அளவுக்கு முதலீடு செய்ததும், அவர்கள் விரும்பினால் தங்கம் டெலிவரி செய்யப்படுகிறது.


latest tamil news


ஆன்லைன் வாயிலான தங்க விற்பனை இந்தியாவுக்கு ஒன்றும் புதிதானது அல்ல எனினும், நகைக்கடைக்காரர்கள் இதுவரை தள்ளியே இருந்தனர்.இப்போது அவர்களும் இந்த புதிய வணிக முறைக்கு வந்துள்ளனர். இளம் தலைமுறையை சேர்ந்தவர்கள், ஆன்லைன் வாயிலாகவே பொருட்களை வாங்க விரும்புவது, இவர்களுக்கு புதிய வழியை காட்டி உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DVRR - Kolkata,இந்தியா
30-செப்-202116:20:27 IST Report Abuse
DVRR 1) இது மோசடி என்று பிற்காலத்தில் தெரியும் அதாவது ரூ 150 கோடி சுருட்டப்பட்டது என்று பேப்பரில் செய்தி வரும் 2) பிட்காயின் என்றொரு பங்கு ரூ 34,05,475 ஒரு பங்கு அதை துண்டு துண்டாக வாங்கலாம் அதாவது ரூ 100, 1000.....என்று எவ்வளவு வேண்டுமானலும் போட்டு அதில் அந்த விலையை பொறுத்து உங்களுக்கு (1 / 3405475)பங்கு ஒவ்வொரு ரோப்பைக்கும் என்ற கணக்கில் கிடைக்கும் அதே திசையில் இதை எடுத்துச்செல்கின்றனர் அதாவது 24 காரட் ஒரு கிராம் (1 / 4757) பங்கு நீங்கள் எவ்வளவு ரூபாய் போடுகிண்றீர்களோ அதை பெருக்கவேண்டும் அவ்வளவு கிராம் ரூ 100 போட்டால் 0.02010 தங்கம் அளவு உங்கள் சொத்து இப்படி பல தடவை போட்ட பின்பு நீங்கள் ஒரு கிராம் 24கேரட் 1 கிராம் உங்கள் சொந்தமாகும். இது நீண்ட நாட்களுக்கு போகும்போது நிச்சயம் கணக்கில் குளறுபடி நடக்க வாய்ப்பு உள்ளதது மக்கள் ஏமாற்றப்பட 100% வாய்ப்பு உள்ளது. வீட்டில் சேர்த்து வையுங்கள் மக்களே அந்த அளவுக்கு சேர்ந்தவுடன் சென்று தங்கம் வாங்குங்கள் இதை நம்பாதீர்கள்
Rate this:
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
30-செப்-202116:09:53 IST Report Abuse
மலரின் மகள் தங்கம் பிஸ்கட் கட்டி என்று வாங்குவதானால் ஒன்லைன் வர்த்தகம் ஓகே எனலாம். மற்றபடி போட்டோக்களை பார்த்து டிசைன் செலக்ட் செய்து வாங்கும்போது அது வித்தியாசமாகவே இருக்கிறது. போட்டோக்கள் ஜூம் செய்யப்பட்டு பெரிதாக காட்டப்படுகின்றன. நேரில் நன்றாக இருப்பதில்லை. நகையும் வைரமும் ஜொலிக்கவேண்டும். அதை ஒன்லைனில் கண்டுபிடிப்பது கடினம். மற்றபடி நீங்கள் கூறியுள்ள நிறுவனத்தின் மூலம் நகைகள் சாலிடெர் வாங்குவதுண்டு. விலை அதிகம். அன்றாடம் மாற்றி மாற்றி தேசிகனுக்காக வாங்குகின்ற நகைகளை தவிர சேமிப்பிற்காக இவர்களிடம் வாங்கவே கூடாது. கிராமிற்கு முப்பது சதவீதத்திற்கு குறைவில்லாமல் ஏற்றித்தான் விலைவாசி இருக்கும். தங்க காயின்கள் பிஸ்கட்கள் விலை பிஐஎஸ் குறியீடு செய்யப்பட்ட நல்ல தரமான தங்கம் மற்ற கடைகளில் மிகவும் குறைந்த விலைக்கு கிடைக்கும். இவர்களின் சுத்தமான விஸ்தாரமான கார் பார்க்கிங் வசதிக்காக மட்டுமே அந்த அளவிற்கு கூடுதல் பிரிமியம் தருவது புத்திசாலித்தனமான சேமிப்பல்ல.
Rate this:
Cancel
JSS - Nassau,பெர்முடா
30-செப்-202115:31:00 IST Report Abuse
JSS தங்கத்துக்கு பதில் போலிஷ் செய்த பித்தளை டெலிவரி செய்தால்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X