கபில் சிபல் வீட்டை தாக்கிய சொந்த கட்சியினர்; கார் சேதம்

Updated : செப் 30, 2021 | Added : செப் 30, 2021 | கருத்துகள் (28)
Share
Advertisement
புதுடில்லி: பஞ்சாப் காங்கிரஸில் நிகழ்ந்து வரும் குழப்பங்களை சுட்டிக்காட்டி ராகுல் காந்தியை பெயர் குறிப்பிடாமல் கடுமையாக விமர்சித்திருந்தார் அக்கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல். இதற்கு இளைஞர் காங்கிரஸினர் எதிர்ப்பு தெரிவித்து அவர் வீட்டில் தாக்குதல் நடத்தி காரை சேதப்படுத்தினர். ராகுல் காந்தி தலைமையில் 2019 பாராளுமன்றத் தேர்தலைச் சந்தித்த காங்கிரஸ் 2-வது

புதுடில்லி: பஞ்சாப் காங்கிரஸில் நிகழ்ந்து வரும் குழப்பங்களை சுட்டிக்காட்டி ராகுல் காந்தியை பெயர் குறிப்பிடாமல் கடுமையாக விமர்சித்திருந்தார் அக்கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல். இதற்கு இளைஞர் காங்கிரஸினர் எதிர்ப்பு தெரிவித்து அவர் வீட்டில் தாக்குதல் நடத்தி காரை சேதப்படுத்தினர்.



latest tamil news


ராகுல் காந்தி தலைமையில் 2019 பாராளுமன்றத் தேர்தலைச் சந்தித்த காங்கிரஸ் 2-வது முறையாக படுதோல்வி அடைந்தது. அதற்கு பொறுப்பேற்று தனது கட்சிப் பதவியை அவர் ராஜினாமா செய்தார். 2 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் இன்னமும் காங்கிரஸ் கட்சி முழு நேர தலைமையின்றி தத்தளித்துக் கொண்டுள்ளது. இதற்கிடையில் காங்கிரஸ் ஆண்ட கர்நாடகா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் உட்கட்சிப் பூசலாலேயே ஆட்சிப் பறிபோனது.

தற்போது பஞ்சாபிலும் அந்த நிலை ஏற்பட்டுள்ளது. சித்துவுக்காக முதல்வர் அமரீந்தர் சிங்கை ராஜினாமா செய்யச் சொன்னார்கள். தற்போது அவர் பா.ஜ.க.,வில் சேரும் முடிவுக்கு வந்துள்ளார். திடீர் திருப்பமாக சித்துவும் காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல் ஊடகங்களை அழைத்து கட்சித் தலைமை பற்றி தொடர் கேள்விகளை எழுப்பினார்.


latest tamil news



“காங்கிரஸில் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் இல்லாத போது, முடிவுகளை எடுப்பது யார்? யார் முடிவெடுக்கிறார்கள் என்பது எங்களுக்கும் தெரியவில்லை. நாங்கள் ஆமாம் சாமிகள் கிடையாது. தொடர்ந்து பிரச்னைகளை எழுப்புவோம்.” என காட்டமாக கூறியிருந்தார். ராகுலை சுற்றி இருப்பவர்கள் ஆமாம் சாமி போடுபவர்களாக இருப்பதாகவும், தனது வட்டத்துக்கு வெளியே இருப்பவர்களின் அறிவுரையை அவர் கேட்பதில்லை என்ற கருத்துள்ள நிலையில், கபில் சிபல் இத்தகைய விமர்சனத்தை வைத்தார்.

இதனால் ஆத்திரமடைந்த ராகுல் காந்தியின் ஆதரவாளர்கள் கபில் சிபல் வீட்டின் முன் கூடி அவருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். தக்காளிகளை கொண்டு தாக்கினர். அவர் வீட்டின் வெளியே நிறுத்தியிருந்த காரை அடித்து நொறுக்கினர். மேலும் ராகுல் காந்தி ஜிந்தாபாத் என கோஷங்கள் எழுப்பினர். சீக்கிரம் குணமடையுங்கள், கட்சியை விட்டு வெளியேறுங்கள் போன்ற பதாகைகளையும் ஏந்தியிருந்தனர். இது குறித்து என்.டி.டி.வி.,க்கு பேட்டியளித்த கபில் சிபல், “இது போன்ற டிராமா என்னை கலக்கமடையச் செய்யாது. நான் சொன்ன விஷயத்தில் மிகவும் கவனமாகவே இருந்தேன்.” என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
30-செப்-202118:31:43 IST Report Abuse
ராமகிருஷ்ணன் தாக்குதல் சரியாக இல்லை. எப்படி தாக்குதல் நடத்த வேண்டும் என்பதை தமிழக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளிடம் பாடம் எடுத்துக் கொள்ள வேண்டும். அல்லது மம்தாவின் குண்டர்களிடம் கற்றுக் கொள்ளலாம்.
Rate this:
Cancel
INDIAN Kumar - chennai,இந்தியா
30-செப்-202115:12:59 IST Report Abuse
INDIAN Kumar சரியான தலைமை இல்லை என்றால் கட்சி கலகலத்து போகும் என்பது உண்மை அது இத்தாலி காங்கிரஸ் கட்சியாக இருந்தாலும் சரி இரட்டை தலைமை இருந்தாலும் சரி.
Rate this:
Cancel
ரிஷிகேஷ் நம்பீசன் - கலைஞர் நகர் ,இந்தியா
30-செப்-202113:01:59 IST Report Abuse
ரிஷிகேஷ் நம்பீசன் சிங்கி கூட்டம் சொல்லுது congress அழிந்து விட்டது என்று அப்புறம் எப்படி இப்படி எல்லாம் நடக்குது
Rate this:
DVRR - Kolkata,இந்தியா
30-செப்-202116:58:14 IST Report Abuse
DVRRஉள்ளுறை அர்த்தம் புரியாது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X