சம்பவம் செய்தி

தமிழ்நாடு

எப்படியெல்லாம் திருடுறாங்க பாருங்க!

Added : செப் 30, 2021
Share
Advertisement
கோவை : போலி ரசீது தயாரித்து, 4.40 லட்சம் ரூபாய் மதிப்பிலான மொபைல் போன்களை திருடிய இ-காமர்ஸ் நிறுவன ஊழியர்கள் இருவர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.கோவை, திருச்சி ரோடு, சிங்காநல்லுாரில் 'இ-காம் எக்ஸ்பிரஸ்' என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் 'அமேசான்' உள்ளிட்ட 'இ-காமர்ஸ்' நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து, அவர்களின் பொருட்களை கோவை

கோவை : போலி ரசீது தயாரித்து, 4.40 லட்சம் ரூபாய் மதிப்பிலான மொபைல் போன்களை திருடிய இ-காமர்ஸ் நிறுவன ஊழியர்கள் இருவர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

கோவை, திருச்சி ரோடு, சிங்காநல்லுாரில் 'இ-காம் எக்ஸ்பிரஸ்' என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் 'அமேசான்' உள்ளிட்ட 'இ-காமர்ஸ்' நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து, அவர்களின் பொருட்களை கோவை மற்றும் திருப்பூரில் வாடிக்கையாளர்களுக்கு, 'டெலிவரி' செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது.இந்நிறுவனத்தில் பணியாற்றிய இருவர் போலி ரசீது தயாரித்து, 4.40 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 49 மொபைல்போன்களை திருடியது, நிறுவன தணிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டது.சிங்காநல்லுார் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. நிறுவன கிளை மேலாளர் சந்தீஸ்வரன், 'டெலிவரி' ஊழியர் பார்த்திபன் ஆகியோர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

சிங்காநல்லுார் போலீசார் கூறுகையில், 'வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்யும் பொருட்களை, சில நேரங்களில் வேண்டாம் என்று திருப்பி அனுப்பி விடுவார்கள். அவ்வாறு திருப்பி கொடுக்கப்படும் மொபைல்போன் உள்ளிட்ட பொருட்களை, மீண்டும் அதே நிறுவனத்தில் ஒப்படைக்க வேண்டும். அப்போது அந்த நிறுவனம் பொருட்களை, மீண்டும் வாங்கி கொண்டதற்கான ரசீதை தருவார்கள்.இவ்வாறு திருப்பி கொடுத்த, 4.40 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 49 மொபைல்போன்களை மீண்டும் நிறுவனத்தில் ஒப்படைக்காமல், போலி ரசீது தயாரித்து இருவரும் மோசடி செய்துள்ளனர்.இதுதொடர்பாக ஊழியர்கள் இருவர் மீது, மோசடி வழக்கு பதிவு செய்து தலைமறைவான இருவரை தேடி வருகிறோம்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X