பொது செய்தி

தமிழ்நாடு

85 சதவீதம் வாங்கியாச்சு; 15 சதவீதம் பேர் பாக்கி! உணவு ரசீதில் பதிவு எண் நாளை முதல் கட்டாயம்

Added : செப் 30, 2021
Share
Advertisement
கோவை : கோவை மாவட்டத்தில் உணவு பண்டங்கள் விற்பனை செய்யும் 85 சதவீதம் வணிகர்களுக்கு உரிமம், பதிவு எண் வழங்கப்பட்டுள்ளது. இந்த பதிவு எண்ணை, அவர்களது விற்பனை ரசீதில் குறிப்பிடும் நடைமுறை நாளை முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.உணவு பண்டங்களை விலை கொடுத்து வாங்கும் வாடிக்கையாளர்கள் பலர், அதில் ஏதேனும் குறைபாடு இருந்தால் எங்கு புகார் தெரிவிப்பது, எப்படி புகார் தெரிவிப்பது

கோவை : கோவை மாவட்டத்தில் உணவு பண்டங்கள் விற்பனை செய்யும் 85 சதவீதம் வணிகர்களுக்கு உரிமம், பதிவு எண் வழங்கப்பட்டுள்ளது. இந்த பதிவு எண்ணை, அவர்களது விற்பனை ரசீதில் குறிப்பிடும் நடைமுறை நாளை முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

உணவு பண்டங்களை விலை கொடுத்து வாங்கும் வாடிக்கையாளர்கள் பலர், அதில் ஏதேனும் குறைபாடு இருந்தால் எங்கு புகார் தெரிவிப்பது, எப்படி புகார் தெரிவிப்பது என்று தெரியாமல் சிரமப்படுகின்றனர்.இந்த குறைபாடுகளை தீர்க்க, உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தொடர் முயற்சி மேற்கொண்டு வருகிறது. அனைத்து 'பேக்கேஜ்டு' உணவு பொருட்களின் லேபிளில் உரிமம், பதிவு எண்குறிப்பிட வேண்டும் என்ற நடைமுறை உள்ளது.

ரெஸ்டாரென்ட், ஸ்வீட் கடைகள், கேட்டரிங், சில்லரை விற்பனை கடைகளில் இந்த எண் விவரத்தை பளிச்சென தெரியும்படி வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.எனினும், சம்பந்தப்பட்ட உணவு விற்பனை நிறுவனத்தின் உரிமம் எண், பதிவு எண் விவரத்தை, பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் அறிந்து கொள்வதில் சிரமம் தொடர்கிறது.இதற்கு தீர்வு காணும் நோக்கத்துடன், உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் புதிய உத்தரவை அமல்படுத்தியுள்ளது.

அதன்படி, எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., ஆணையம் வழங்கும் 14 இலக்க உரிமம் எண் அல்லது பதிவு எண்ணை அனைத்து விற்பனை ரசீதுகளிலும் அச்சிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் சம்பந்தப்பட்ட உணவு உற்பத்தியாளர், வினியோகிப்பாளர்களை நேரடியாக கண்டறிவதும், நடவடிக்கை எடுப்பதும் எளிதாகும்.இது குறித்து, கோவை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் தமிழ்செல்வன் கூறியதாவது:உணவு பாதுகாப்புத்துறை சார்பில் உணவு விற்பனையாளர்களுக்கு உரிமம் வழங்கப்படுகிறது. இதை ஆண்டுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும்.

ஐந்து ஆண்டுக்கு மொத்தமாகவும் உரிமம் பெற முடியும்.இவ்வாறு வணிகர்கள் பெற்றுள்ள உரிமம் எண் அல்லது பதிவு எண்ணை விற்பனை ரசீதில் குறிப்பிடும் நடைமுறை நாளை(அக்.,1) முதல் அமலுக்கு வருகிறது.மாவட்டத்தில் 10,450 உணவு உற்பத்தியாளர்கள், ஓட்டல்களுக்கு உரிமம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதில் 8833 பேர், அதாவது84.5 சதவீதம் வியாபாரிகள் உரிமம் பெற்றுள்ளனர்.இது மட்டுமின்றி, 27,500 வணிகர்களுக்கு பதிவு எண் வழங்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதில் 85 சதவீதம், அதாவது 23,415 பேர் பதிவு எண் பெற்றுள்ளனர்.

இன்னும் உரிமம், பதிவு எண் பெறாத, உரிமத்தை புதுப்பிக்காதவர்கள் உடனடியாக அதை செய்ய வேண்டும். இதற்கென துறை சார்பில் நடத்தப்படும் முகாம்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.பழைய உரிமத்தை புதுப்பிக்காமல், உணவுப் பொருள் விற்பனை செய்வோர், உரிமம் எண் இல்லாமல் ரசீது வழங்குவோர் மீது, சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, டாக்டர் தமிழ்செல்வன் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X