சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'அட்ரஸ்' சொன்ன அம்மணியின் இரண்டரை பவுன் நகை அபேஸ்

Added : செப் 30, 2021
Share
Advertisement
கோவை : முகவரி கேட்பதுபோல் நடித்து, பெண்ணிடம் நகை பறித்து தப்பிய பைக் ஆசாமிகளை, போலீசார் தேடி வருகின்றனர்.கோவை, சவுரிபாளையம், ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் மேத்யூ. இவரது மனைவி ரெனி மேத்யூ, 53. இவர் நேற்று முன்தினம், ஜி.வி.,ரெசிடென்சி வழியாக வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த இருவர், பெண்ணிடம் முகவரி கேட்டனர்.அவர்களுக்கு முகவரி சொல்லி

கோவை : முகவரி கேட்பதுபோல் நடித்து, பெண்ணிடம் நகை பறித்து தப்பிய பைக் ஆசாமிகளை, போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை, சவுரிபாளையம், ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் மேத்யூ. இவரது மனைவி ரெனி மேத்யூ, 53. இவர் நேற்று முன்தினம், ஜி.வி.,ரெசிடென்சி வழியாக வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த இருவர், பெண்ணிடம் முகவரி கேட்டனர்.அவர்களுக்கு முகவரி சொல்லி கொண்டிருந்தபோது, திடீரென அவரது கழுத்தில் இருந்த, இரண்டரை பவுன் நகையை இருவரும் பறித்து தப்பி சென்றனர்.அதிர்ச்சியடைந்த பெண், சிங்காநல்லுார் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி, பைக் ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X