பொது செய்தி

தமிழ்நாடு

விதிமுறை மீறிய ஏழு கல்குவாரிகள் செயல்பட தடை; கனிமவளத்துறை அதிரடி உத்தரவு

Added : செப் 30, 2021
Share
Advertisement
கோவை : கோவை மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி இயங்கிய ஏழு கல்குவாரிகளை செயல்பட, கனிமவளத்துறை அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.கோவை மாவட்டத்தில் அன்னுார், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, மதுக்கரை, சூலுார் தாலுகாக்களில், 122 கல்குவாரிகள் உள்ளன. ஒவ்வொரு கல்குவாரிகளுக்கும் நிர்ணயிக்கப்பட்ட அளவு ஆழத்திலும், பரப்பளவிலும் பாறைகளை வெட்டி எடுக்கலாம் என்ற விதிமுறை, கனிமவளத்துறையினரால்

கோவை : கோவை மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி இயங்கிய ஏழு கல்குவாரிகளை செயல்பட, கனிமவளத்துறை அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் அன்னுார், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, மதுக்கரை, சூலுார் தாலுகாக்களில், 122 கல்குவாரிகள் உள்ளன. ஒவ்வொரு கல்குவாரிகளுக்கும் நிர்ணயிக்கப்பட்ட அளவு ஆழத்திலும், பரப்பளவிலும் பாறைகளை வெட்டி எடுக்கலாம் என்ற விதிமுறை, கனிமவளத்துறையினரால் வகுத்துக்கொடுக்கப்பட்டுள்ளது.விதிமுறைகளை மீறி கற்களை தோண்டி எடுக்கும் குவாரி உரிமையாளர்கள் மீது, கனிமவளத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அனுமதியின்றி பாறைகளை வெட்டி எடுக்கும் குவாரிகளின் மீதும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

கோவை மாவட்டத்தில் மூன்று மாதங்களில் அனுமதி பெறாமலும், விதிமுறைகளை மீறியும் பாறைகளை வெட்டி எடுத்த ஏழு கல்குவாரிகள் மீது, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.கனிமவளத்துறை கோவை மாவட்ட உதவி இயக்குனர் ரமேஷ்குமார் கூறியதாவது:கல்குவாரி அமைப்பதற்கு கனிமவளத்துறை, மாசுக்கட்டுப்பாட்டுவாரியம் மற்றும் சுற்றுச்சூழல் துறை, புவியியல் துறை, வேளாண், வருவாய், போலீஸ், உள்ளாட்சி அமைப்பு உள்ளிட்ட அனைத்து துறையிடமும் அனுமதி பெற வேண்டும். தடையில்லா சான்று பெறவேண்டும்.

கோவை மாவட்டத்தில் அரசு அனுமதி பெற்று 122 குவாரிகள் செயல்படுகிறது. குவாரிகளில் 60 முதல் 70 மீட்டர் வரை கற்களை வெட்டி எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.இச்சூழலில் விதிமுறைகளை மீறியும், அனுமதி பெறாமலும் இயங்கிய, அன்னுார் தாலுகாவுக்குட்பட்ட அல்லப்பாளையம், கொண்டையம்பாளையம், பள்ளபாளையம், பச்சாபாளையம் உள்ளிட்ட பகுதிகளில், செயல்பட்ட ஏழு கல்குவாரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இக்குவாரிகள் செயல்பட தடை விதித்தும், மேல்நடவடிக்கைக்காகவும் வருவாய் கோட்டாட்சியர் (ஆர்.டி.ஓ.,) வசம் விபரங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X