பொது செய்தி

தமிழ்நாடு

ரிசர்வ் சைட்டில் சாலை அமைக்க முயற்சி; மக்கள் எதிர்ப்பால் பரபரப்பு

Added : செப் 30, 2021
Share
Advertisement
போத்தனூர் : போத்தனூரிலிருந்து நஞ்சுண்டாபுரம் செல்லும் வழியில், மாநகராட்சியின், 95வது வார்டுக்குட்பட்ட அம்மன் நகர் உள்ளது. இந்நகரின் பிரதான சாலையின் இறுதியில் ராஜவாய்க்கால் செல்கிறது. இவ்விடத்தில் சுமார், 9.21 சென்ட் ரிசர்வ் சைட் உள்ளது. இங்கு ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டுள்ளது.வாய்க்காலின் மறுபுறம் வெள்ளலூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில், சில ஆண்டுக்கு முன்

போத்தனூர் : போத்தனூரிலிருந்து நஞ்சுண்டாபுரம் செல்லும் வழியில், மாநகராட்சியின், 95வது வார்டுக்குட்பட்ட அம்மன் நகர் உள்ளது. இந்நகரின் பிரதான சாலையின் இறுதியில் ராஜவாய்க்கால் செல்கிறது. இவ்விடத்தில் சுமார், 9.21 சென்ட் ரிசர்வ் சைட் உள்ளது. இங்கு ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டுள்ளது.

வாய்க்காலின் மறுபுறம் வெள்ளலூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில், சில ஆண்டுக்கு முன் வீட்டுமனைகள் பிரிக்கப்பட்டன. அப்போது அம்மன் நகர் பிரதான சாலையை இணைக்கும் வகையில் சாலை அமைக்க முயற்சிக்கப்பட்டது. மக்கள் முயற்சியால் தடுக்கப்பட்டு, கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.நேற்று அப்பகுதியில் மாநகராட்சி சார்பில், 'மாஸ் கிளீனிங்' நடந்தது.

இதனைத் தொடர்ந்து, 2:30 மணியளவில் வீட்டுமனை விற்பனை செய்வோர், சாலை போடுவதற்காக மெட்டல் கலவையை ரிசர்வ் சைட்டில் கொட்டினர்.அப்பகுதியினர் போத்தனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ரிசர்வ் சைட் அருகே, 30க்கும் மேற்பட்டோர் திரண்டனர். அங்கு வந்து விபரங்களை கேட்டறிந்த போலீசார், பணிகள் ஏதேனும் மேற்கொண்டால் தகவல் தர அறிவுறுத்தி சென்றனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X