பொது செய்தி

தமிழ்நாடு

கோவை அரசு மருத்துவமனையில் 3 ஆண்டில் 5 ஆயிரம் ஆஞ்சியோகிராம்!

Added : செப் 30, 2021
Share
Advertisement
கோவை : கோவை அரசு மருத்துவமனையில் கடந்த மூன்று ஆண்டுகளில், 5 ஆயிரம் ஆஞ்சியோகிராம்,3250 ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர சிகிச்சை திட்டத்தின் கீழ், மாரடைப்புடன் வரும் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க, 'ஸ்டெமி' திட்டம் செயல்படுத்தப்படுகிறது.இந்த திட்டத்தின் கீழ், அரசு மருத்துவமனைகளுக்கு, மாரடைப்புடன் வரும் நோயாளிகளுக்கு

கோவை : கோவை அரசு மருத்துவமனையில் கடந்த மூன்று ஆண்டுகளில், 5 ஆயிரம் ஆஞ்சியோகிராம்,3250 ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர சிகிச்சை திட்டத்தின் கீழ், மாரடைப்புடன் வரும் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க, 'ஸ்டெமி' திட்டம் செயல்படுத்தப்படுகிறது.இந்த திட்டத்தின் கீழ், அரசு மருத்துவமனைகளுக்கு, மாரடைப்புடன் வரும் நோயாளிகளுக்கு விரைந்து சிகிச்சையளிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மாரடைப்புடன், மேல் சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு, அரசு மருத்துவமனையின், இருதய துறையில் 24 மணி நேரத்தில் ஆஞ்சியோகிராம், ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதற்கென, மருத்துவமனையில் 2018ம் ஆண்டு மார்ச் 31ல் கேத் லேப் நிறுவப்பட்டது. இன்று வரை 5 ஆயிரம் ஆஞ்சியோகிராம் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 3250 ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்று காலத்திலும் இச்சிகிச்சை தடையின்றி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.குறுகிய காலத்தில் இதனை சாத்தியமாக்கிய மருத்துவ குழுவினருக்கு, மருத்துவமனை டீன் நிர்மலா பாராட்டு தெரிவித்துள்ளார்.

நம்மூர் ஆஸ்பத்திரியை என்ன நினைச்சீங்க!கோவை அரசு மருத்துவமனையானது, சுற்றியுள்ள 5 மாவட்டங்களுக்கு மண்டல மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. இதன் கீழ், முதன்மை சிகிச்சை மையங்களாக, குன்னுார், தாராபுரம், கோபிசெட்டிபாளையம், காங்கேயம், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, சத்தியமங்கலம், உடுமலைப்பேட்டை, ஈரோடு, பல்லடம், கோத்தகிரி, கூடலுார், மடத்துக்குளம், சூலுார் அன்னுார் ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளும், நீலகிரி, கரூர், பெருந்துறை, இ.எஸ்.ஐ.,திருப்பூர் ஆகிய பகுதிகளில் உள்ள மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைகளும், கிளை மையங்களாக செயல்பட்டு வருகின்றன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X