தினமும் ரூ.1.5 கோடி வரி வருவாய் பிரிவுக்கு உத்தரவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தினமும் ரூ.1.5 கோடி வரி வருவாய் பிரிவுக்கு உத்தரவு

Added : செப் 30, 2021
Share
கோவை : கோவை மாநகராட்சியில், கடந்த ஆறு மாதங்களில், 85.94 கோடி ரூபாயே சொத்து வரி வசூலாகி இருக்கிறது. அதனால் நாளொன்றுக்கு, 1.5 கோடி ரூபாய் வசூலிக்க வேண்டுமென, வருவாய் பிரிவினருக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.கோவை மாநகராட்சிக்கு சொத்து வரியே பிரதான வருவாய். ஏப்., - செப்., அக்., - மார்ச் என, ஆறு மாதத்துக்கு ஒருமுறை என, ஆண்டுக்கு இரு முறை சொத்து வரி வசூலிக்கப்படும்.மொத்தம், 5.45 லட்சம் வரி

கோவை : கோவை மாநகராட்சியில், கடந்த ஆறு மாதங்களில், 85.94 கோடி ரூபாயே சொத்து வரி வசூலாகி இருக்கிறது. அதனால் நாளொன்றுக்கு, 1.5 கோடி ரூபாய் வசூலிக்க வேண்டுமென, வருவாய் பிரிவினருக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.

கோவை மாநகராட்சிக்கு சொத்து வரியே பிரதான வருவாய். ஏப்., - செப்., அக்., - மார்ச் என, ஆறு மாதத்துக்கு ஒருமுறை என, ஆண்டுக்கு இரு முறை சொத்து வரி வசூலிக்கப்படும்.மொத்தம், 5.45 லட்சம் வரி விதிப்புதாரர்கள் இருக்கின்றனர். நடப்பாண்டு ரூ.203.99 கோடி, பழைய நிலுவை ரூ.172.51 கோடி என, ரூ.376.51 கோடி வசூலிக்க வேண்டும்.இதுநாள் வரை, நிலுவையில் ரூ.18.01 கோடி, நடப்பாண்டில் ரூ.67.93 கோடி என, 85.94 கோடியே வசூலாகி இருக்கிறது. மொத்தம், 22.83 சதவீதமே வசூலிக்கப்பட்டு உள்ளது.

இன்னும் வசூலிக்கப்படாமல், 290.57 கோடி ரூபாய் நிலுவை இருக்கிறது. ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் ஒவ்வொரு மாதமும் திணறல் ஏற்படுகிறது.ஒப்பந்ததாரர்களுக்கு ரூ.120 கோடி கொடுக்க வேண்டியிருக்கிறது. அதனால் தினமும், 1.5 கோடி ரூபாய் சொத்து வரி வசூலித்தாக வேண்டுமென, வருவாய் பிரிவினருக்கு அறிவுரை வழங்கப்பட்டிருக்கிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X