பொது செய்தி

தமிழ்நாடு

இன்று முதல் அக்.,6 வரை இடி, மழைக்கு வாய்ப்பு

Added : செப் 30, 2021
Share
Advertisement
கோவை : ''இன்று (செப்., 30) முதல் அக்., 6 வரை இடியுடன் கன மழை பெய்யும்,'' என, வானிலை ஆராய்ச்சியாளர் சந்தோஷ் கிருஷ்ணன் கூறினார்.கோவை நகருக்கு மிக முக்கிய நீராதாரமான சிறுவாணி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில், நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, 21 மி.மீ., மழை பதிவானது.42.95 அடியாக நீர் மட்டம் அதிகரித்திருக்கிறது. இன்று (செப்., 30) முதல் அக்., 6 வரை கன மழை பெய்யும் என

கோவை : ''இன்று (செப்., 30) முதல் அக்., 6 வரை இடியுடன் கன மழை பெய்யும்,'' என, வானிலை ஆராய்ச்சியாளர் சந்தோஷ் கிருஷ்ணன் கூறினார்.

கோவை நகருக்கு மிக முக்கிய நீராதாரமான சிறுவாணி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில், நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, 21 மி.மீ., மழை பதிவானது.42.95 அடியாக நீர் மட்டம் அதிகரித்திருக்கிறது. இன்று (செப்., 30) முதல் அக்., 6 வரை கன மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.வானிலை ஆராய்ச்சியாளர் சந்தோஷ் கிருஷ்ணன் கூறியதாவது:இனி, தென்மேற்கு பருவமழை மெல்ல மெல்ல விலக ஆரம்பிக்கும்.

வடகிழக்கு பருவ பெய்யத் துவங்கும். அக்., - நவ., மாதங்களில் சராசரியை காட்டிலும், அதிக மழையை எதிர்பார்க்கலாம்.காற்று மேலடுக்கு சுழற்சி, இலங்கையில் இருந்து அரபிக்கடல் நோக்கி நகர இருக்கிறது. செப்., 30 முதல் அக்., 6 வரை வெப்பச்சலன மழை, இடியுடன் பெய்ய வாய்ப்பிருக்கிறது.

தமிழகத்தின் தெற்கு பகுதி மற்றும் கொங்கு மண்டலம், கேரளாவில் மழைப்பொழிவு காணப்படும். கோவை நகர் பகுதியிலும், கனமழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X