பொது செய்தி

தமிழ்நாடு

கோவை விமான நிலைய விரிவாக்கம்: நில உரிமையாளர்களுக்கு அழைப்பு

Added : செப் 30, 2021
Share
Advertisement
கோவை : கோவை விமான நிலைய விரிவாக்கப்பணிக்கு தேர்வு செய்யப்பட்ட நிலத்தின் உரிமையாளர்கள், தங்கள் அசல் நில ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.கோவை விமான நிலைய ஓடுதள விரிவாக்கப் பணிகளுக்காக, 624 ஏக்கர் நிலம் எடுக்கப்பட உள்ளது. நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக தமிழக அரசு, 1,132 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.ஏற்கனவே அளவீடு செய்யப்பட்டு,

கோவை : கோவை விமான நிலைய விரிவாக்கப்பணிக்கு தேர்வு செய்யப்பட்ட நிலத்தின் உரிமையாளர்கள், தங்கள் அசல் நில ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலைய ஓடுதள விரிவாக்கப் பணிகளுக்காக, 624 ஏக்கர் நிலம் எடுக்கப்பட உள்ளது. நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக தமிழக அரசு, 1,132 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.ஏற்கனவே அளவீடு செய்யப்பட்டு, பரிசீலனையில் இருக்கும் நிலத்தின் உரிமையாளர்கள், திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் காலை 10:00 முதல் பகல் 1:00 மணி வரை தங்கள் ஆவணங்களை, கலெக்டர் அலுவலக பழைய கட்டடத்தின், இரண்டாம் தளத்தில் செயல்படும் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலகம் அல்லது மாவட்ட திட்ட இயக்குனர் அலுவலக கூட்ட அரங்கில் செயல்படும் தனி தாசில்தார் அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம்.அசல் நிலப்பத்திர ஆவணம், மூலப்பத்திர நகல், வில்லங்க சான்று, டி.எஸ்.எல்.ஆர்., கிராம நிர்வாக அலுவலர் வழங்கிய உரிமை சான்று, வீட்டு வரி ரசீது அல்லது காலி மனையிட வரி ரசீது, கணினி சிட்டா, மின்னணு அட்டை, குடிநீர் இணைப்பு ரசீது, தேவைப்பட்டால் இறப்பு சான்று மற்றும் வாரிசு சான்று, வங்கி கணக்கு புத்தகம், ஆதார் அட்டை, பான் கார்டு ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.மேலும் விவரங்களுக்கு, 0422 - 230 1171 என்ற போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று கலெக்டர் சமீரன் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X