தமிழ்நாடு

7 ஆண்டாக வாடகை செலுத்தாமல் 'டிமிக்கி'; 15 கடைகளுக்கு 'சீல்' வைத்தது மாநகராட்சி

Added : செப் 30, 2021
Share
Advertisement
கோவை : கோவை மாநகராட்சி வணிக வளாகத்தில் கடை நடத்துவோர், ஏழு ஆண்டுகளாக வாடகை செலுத்தாமல் இருப்பது தெரியவந்தது. வருவாய் பிரிவினர் நேற்று ஆய்வு செய்து, 15 கடைகளை மூடி, 'சீல்' வைத்தனர்.கோவை மாநகராட்சிக்கு சொந்தமாக, பஸ் ஸ்டாண்ட்டுகள், மார்க்கெட்டுகள் மற்றும் நகரின் முக்கிய இடங்களில் வணிக வளாகங்கள் கட்டப்பட்டுள்ளன. இவற்றில் கடை நடத்துவோரில் சிலர், பல ஆண்டுகளாக வாடகை
 7 ஆண்டாக வாடகை செலுத்தாமல் 'டிமிக்கி';  15 கடைகளுக்கு 'சீல்' வைத்தது மாநகராட்சி

கோவை : கோவை மாநகராட்சி வணிக வளாகத்தில் கடை நடத்துவோர், ஏழு ஆண்டுகளாக வாடகை செலுத்தாமல் இருப்பது தெரியவந்தது. வருவாய் பிரிவினர் நேற்று ஆய்வு செய்து, 15 கடைகளை மூடி, 'சீல்' வைத்தனர்.

கோவை மாநகராட்சிக்கு சொந்தமாக, பஸ் ஸ்டாண்ட்டுகள், மார்க்கெட்டுகள் மற்றும் நகரின் முக்கிய இடங்களில் வணிக வளாகங்கள் கட்டப்பட்டுள்ளன. இவற்றில் கடை நடத்துவோரில் சிலர், பல ஆண்டுகளாக வாடகை செலுத்தாமல் நிலுவை வைத்திருப்பது தெரியவந்தது.அக்கடைகளை கண்டறிந்து, வாடகை வசூலிக்கும் வேலையை, வருவாய் பிரிவினர் துரிதப்படுத்தியுள்ளனர். தியாகி குமரன் மார்க்கெட்டில், 100 கடை உரிமையாளர்கள் வாடகை செலுத்தாமல் இருப்பது தெரியவந்தது.

முதல்கட்டமாக, 25 கடைகள் மூடப்பட்டு, 'சீல்' வைக்கப்பட்டன.மத்திய மண்டலம், 72வது வார்டு, தொட்டராயன் கோவில் வீதியில் உள்ள வணிக வளாகத்தில், 63 கடைகள் இருக்கின்றன. இதில், 15 கடைக்காரர்கள், ஏழு ஆண்டுகளாக வாடகை செலுத்தாமல் இருப்பது கண்டறியப்பட்டது. மொத்தம், 17 லட்சத்து, 3 ஆயிரத்து, 427 ரூபாய் நிலுவை இருக்கிறது.

மாநகராட்சியில் இருந்து நோட்டீஸ் வழங்கிய போது, கொரோனா தொற்று பரவல் காரணமாக, வாடகை செலுத்த முடியவில்லை என காரணம் கூறியிருக்கின்றனர்.அதற்கு, 2020, மார்ச் மாதத்துக்கு முந்தைய நிலுவை தொகையை செலுத்துங்கள் என, மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்தொகையை செலுத்தாமல் தாமதித்து வந்ததால், உதவி கமிஷனர் (வருவாய்) செந்தில்குமார் ரத்தினம், உதவி வருவாய் அலுவலர் செந்தில் ஆகியோர் தலைமையில் சென்ற குழுவினர், கடைகளை பூட்டி, 'சீல்' வைத்தனர்.

ஒரு கடைக்கு வாடகை; 3 கடைகளில் வியாபாரம்!

வணிக வளாகத்தில், பேரிங் வியாபாரம் செய்து வரும் ஒரு கடைக்காரர், மூன்று கடைகளை ஒருங்கிணைந்து ஒரே கடையாக நடத்தி வருவதை, மாநகராட்சி அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.ஆவணங்களை ஆய்வு செய்தபோது, ஒரு கடைக்கான வாடகையை, மாநகராட்சிக்கு செலுத்துவது தெரியந்தது. அருகாமையில் உள்ள இரு கடையில் நடுச்சுவரை இடித்து, ஒரே வளாகமாக்கி இருப்பதும், அதற்கான வாடகையை, முன்னாள் கவுன்சிலர் ஒருவருக்கு மாதந்தோறும் வழங்கி வருவதும் கண்டுபிடிக்கப்பட்டது.ஆனால், மாநகராட்சி பதிவேட்டில், அக்கடைகள் பூட்டி இருப்பதாக இருக்கிறது. கடையை ஆக்கிரமித்திருப்பது தொடர்பாக, கடை உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X