அக்டோபருக்குள்  போனஸ் தொகை; ஆலை தொழிலாளர்கள் கோரிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அக்டோபருக்குள்  போனஸ் தொகை; ஆலை தொழிலாளர்கள் கோரிக்கை

Added : செப் 30, 2021
Share
கோவை : கோவை ஜில்லா பஞ்சாலை தொழிலாளர் சங்க(எச்.எம்.எஸ்.,) நிர்வாகக்குழு கூட்டம், சிங்காநல்லுார் தியாகி என்.ஜி.ஆர்., மஹாலில் நேற்று நடந்தது.சங்க தலைவர் ராஜாமணி தலைமையில் நடந்த கூட்டத்தில், பொதுச்செயலாளர்(பொ) மனோகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தனியார் ஆலைகளில் பணிபுரியும் அனைவருக்கும், 2020-21ம் ஆண்டுக்கான போனஸ், நல்லெண்ண தொகை, அவரவர் ஈட்டிய மொத்த சம்பளத்தில் குறைந்தபட்சம் தலா, 15

கோவை : கோவை ஜில்லா பஞ்சாலை தொழிலாளர் சங்க(எச்.எம்.எஸ்.,) நிர்வாகக்குழு கூட்டம், சிங்காநல்லுார் தியாகி என்.ஜி.ஆர்., மஹாலில் நேற்று நடந்தது.

சங்க தலைவர் ராஜாமணி தலைமையில் நடந்த கூட்டத்தில், பொதுச்செயலாளர்(பொ) மனோகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தனியார் ஆலைகளில் பணிபுரியும் அனைவருக்கும், 2020-21ம் ஆண்டுக்கான போனஸ், நல்லெண்ண தொகை, அவரவர் ஈட்டிய மொத்த சம்பளத்தில் குறைந்தபட்சம் தலா, 15 சதவீதம், அதிகபட்சம் எவ்வளவு என பேசி, ஆலை நிர்வாகங்கள் முடிவு எடுக்க வேண்டும்.போனஸ் தொகையை தொழிற்சங்கத்துடன் பேசி அக்., 23ம் தேதிக்குள், ஆலை தொழிலாளர்களுக்கு பட்டுவாடா செய்ய வேண்டும், 2014-15ம் ஆண்டுக்கான போனஸ் நிலுவை தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X