பொது செய்தி

தமிழ்நாடு

ேஹண்ட்பால் அசோசியேஷன் சார்பில் பயிற்சி முகாம் துவக்கம்

Added : செப் 30, 2021
Share
Advertisement
கோவை : தமிழ்நாடு ஹேண்ட்பால் அசோசியேஷன் சார்பில் மாநில அளவில், 19 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான ஹேண்ட்பால் போட்டி திருவண்ணாமலையில் வரும், 2 மற்றும் 3ம் தேதிகளில் நடக்கிறது. பல்வேறு மாவட்டங்களிலிருந்து, 20க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்க உள்ளன.இதற்கான கோவை மாவட்ட அணி தேர்வு, மாவட்ட ஹேண்ட்பால் அசோசியேஷன் சார்பில், நரசிம்மநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி

கோவை : தமிழ்நாடு ஹேண்ட்பால் அசோசியேஷன் சார்பில் மாநில அளவில், 19 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான ஹேண்ட்பால் போட்டி திருவண்ணாமலையில் வரும், 2 மற்றும் 3ம் தேதிகளில் நடக்கிறது. பல்வேறு மாவட்டங்களிலிருந்து, 20க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்க உள்ளன.

இதற்கான கோவை மாவட்ட அணி தேர்வு, மாவட்ட ஹேண்ட்பால் அசோசியேஷன் சார்பில், நரசிம்மநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி மைதானத்தில் நேற்று முன்தினம் நடந்தது. 60க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.வீரர்களின் விளையாட்டு திறன், விளையாட்டு நுணுக்கம், உடல் திறன், கோல் கீப்பிங், தடுப்பாட்டம், தனித்திறன் போன்ற பல்வேறு அடிப்படையில், 30 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.இவ்வீரர்களுக்கான பயிற்சி முகாம் ஈச்சனாரி, கற்பகம் பல்கலையில் நடக்கிறது. தொடர்ந்து, இந்த முகாமில் சிறப்பாக செயல்படும், 16 வீரர்கள் தேர்வு செய்யப்படுவர். இவ்வீரர்கள், மாநில போட்டியில் பங்கேற்க தகுதி பெறுவார்கள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X