பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளிகளை திறக்க தயாராகுங்கள்! தலைமையாசிரியர்களுக்கு உத்தரவு

Added : செப் 30, 2021
Share
Advertisement
கோவை : எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, வரும் நவ. 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ளதால், கற்பித்தல் பணிகளுக்கு வளாகத்தை ஆயத்தப்படுத்த, தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.கொரோனா தொற்று பரவ துவங்கியதில் இருந்து, கடந்த கல்வியாண்டு முழுக்க, எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படவில்லை.கல்வி தொலைக்காட்சி, ஆன்லைன் வகுப்புகளில்

கோவை : எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, வரும் நவ. 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ளதால், கற்பித்தல் பணிகளுக்கு வளாகத்தை ஆயத்தப்படுத்த, தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவ துவங்கியதில் இருந்து, கடந்த கல்வியாண்டு முழுக்க, எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படவில்லை.கல்வி தொலைக்காட்சி, ஆன்லைன் வகுப்புகளில் மட்டுமே கற்பித்தல் நடப்பதால், மாணவர்கள் மத்தியில் கற்றல் திறன் குறைந்துவிட்டது.குழந்தைகள், வீட்டிற்குள்ளே அடைப்பட்டு கிடப்பதால், மன அழுத்தத்திற்கு ஆளாவதாகவும், கல்வியாளர்கள் ஆதங்கப்படுகின்றனர்.

தொற்று குறைந்து வருவதால், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, நவ.,1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.ஒரு மாத கால இடைவெளி இருப்பதால், பள்ளிகள், பெற்றோர் தரப்பிலும், குழந்தைகளை ஆயத்தப்படுத்த, போதுமான அவகாசம் உள்ளது.இதனால் பள்ளி வளாகங்களில், மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து, தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, வகுப்பறைகளை அடிக்கடி சுத்தம் செய்தல், மேஜை, நாற்காலி, எழுதுபொருட்களின் நிலையை ஆய்வு செய்து, புதிதாக மாற்றுவதாக இருந்தால் உடனடியாக செயல்படுத்துவது அவசியம்.கற்பித்தல் உபகரணங்களை பரிசோதிக்க வேண்டும். தேவையான கிருமிநாசினி பொருட்களை வாங்கி வைத்திருப்பதோடு, மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு வரவழைக்க, தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் சிலர் கூறுகையில், 'ஒரு வகுப்புக்கு 20 மாணவர்களே அமர வைக்க வேண்டுமென உத்தரவிடும் பட்சத்தில், அதிக மாணவர்கள் படிக்கும் பள்ளிகளில், சுழற்சி முறை வகுப்புகள் தான் நடைமுறைப்படுத்த முடியும்.

வளாகங்களை சுத்தம் செய்வது, கற்பித்தலுக்கு ஆயத்தமாவது உள்ளிட்ட பணிகள் துவங்கப்பட்டுள்ளன. போதுமான கால அவகாசம் இருப்பதால், தேவையான முன்னேற்பாடுகள் மேற்கொள்ள முடியும்.பெற்றோரையும் தொடர்பு கொண்டு, நேரடி வகுப்புகளில் பங்கேற்க, குழந்தைகளை ஆயத்தப்படுத்துமாறு தெரிவித்து வருகிறோம்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X