சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மோசடி நிதி நிறுவன சொத்து ஏலம்; கோவை டான்பிட் கோர்ட் உத்தரவு

Added : செப் 30, 2021
Share
Advertisement
கோவை : மோசடி நிதி நிறுவனத்தின் சொத்துக்களை ஏலமிட, கோவை டான்பிட் கோர்ட் உத்தரவிட்டது.கோவை, டாடாபாத்தில் செயல்பட்டு வந்த சீனிவாச பெருமாள் பைனான்ஸ் நிறுவனம், 2008 வரை, 654 பேரிடம், 4.22 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, அந்நிறுவன பங்குதாரர்கள் கிருஷ்ணமூர்த்தி, வரதராஜன், விஜயராகவன், சித்ரா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் மீது, கோவை டான்பிட் கோர்ட்டில், விசாரணை நடந்து வருகிறது.இந்த வழக்கில்,

கோவை : மோசடி நிதி நிறுவனத்தின் சொத்துக்களை ஏலமிட, கோவை டான்பிட் கோர்ட் உத்தரவிட்டது.

கோவை, டாடாபாத்தில் செயல்பட்டு வந்த சீனிவாச பெருமாள் பைனான்ஸ் நிறுவனம், 2008 வரை, 654 பேரிடம், 4.22 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, அந்நிறுவன பங்குதாரர்கள் கிருஷ்ணமூர்த்தி, வரதராஜன், விஜயராகவன், சித்ரா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் மீது, கோவை டான்பிட் கோர்ட்டில், விசாரணை நடந்து வருகிறது.இந்த வழக்கில், நிதி நிறுவனத்திடமிருந்து, கைப்பற்றப்பட்ட டாடாபாத்திலுள்ள 5,200 சதுர அடி கட்டடம், அரசால் இடைமுடக்கம் செய்யப்பட்டது.

இந்த சொத்தை நிரந்தர முடக்கம் செய்து, பொது ஏலத்தில் விட அனுமதி கோரி, அரசு தரப்பு வக்கீல் மாணிக்கராஜ் மனு தாக்கல் செய்தார். விசாரித்த நீதிமன்றம், நிரந்தர முடக்கம் செய்து, பொது ஏலத்தில் விட, மாவட்ட வருவாய் துறைக்கு அனுமதியளித்து உத்தரவிட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X