பொது செய்தி

தமிழ்நாடு

எஸ்.என்.எஸ்., கல்லுாரியில் திறன் மேம்பாட்டு கருத்தரங்கு

Added : செப் 30, 2021
Share
Advertisement
கோவை : எஸ்.என்.எஸ்., தொழில் நுட்பக் கல்லுாரியின் தகவல் தொழில் நுட்பத் துறை சார்பில், 'இணைப்பு நிஜமாக்கம், தோற்ற மெய்மை, மருத்துவ தொழில்துறை போக்கை மாற்றுபவை' என்ற தலைப்பில், திறன் மேம்பாட்டு நிகழ்ச்சி நடந்தது.டில்லி, புனே, மேற்கு வங்காளம், கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, மகாராஷ்டிரா போன்ற பல்வேறு மாநிலங்களை சேர்ந்த, பொறியியல் மற்றும் மருத்துவ கல்லுாரி பேராசிரியர்கள்,

கோவை : எஸ்.என்.எஸ்., தொழில் நுட்பக் கல்லுாரியின் தகவல் தொழில் நுட்பத் துறை சார்பில், 'இணைப்பு நிஜமாக்கம், தோற்ற மெய்மை, மருத்துவ தொழில்துறை போக்கை மாற்றுபவை' என்ற தலைப்பில், திறன் மேம்பாட்டு நிகழ்ச்சி நடந்தது.

டில்லி, புனே, மேற்கு வங்காளம், கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, மகாராஷ்டிரா போன்ற பல்வேறு மாநிலங்களை சேர்ந்த, பொறியியல் மற்றும் மருத்துவ கல்லுாரி பேராசிரியர்கள், 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.ஐந்து நாட்கள் நடந்த நிகழ்வில், தொழில்நுட்ப வல்லுனர்கள், பல்வேறு துறை சார் நிபுணர்கள், தொழில்துறையினர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

அகில இந்திய தொழில் நுட்பக் கல்வி குழு சார்பில் நடந்த கருத்தரங்கில், கல்லுாரி நிறுவனர் சுப்பிரமணியன், தாளாளர் ராஜலட்சுமி, தொழில்நுட்ப இயக்குனர் நளின் விமல் குமார், முதல்வர் செந்துார் பாண்டியன் மற்றும் துணை முதல்வர்கள் தமிழ்செல்வர், விவேகானந்தன் ஆகியோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X