பொது செய்தி

தமிழ்நாடு

'மணக்கவில்லை' கொத்தமல்லி விலை; தொண்டாமுத்தூர் விவசாயிகள் கவலை

Added : செப் 30, 2021
Share
Advertisement
தொண்டாமுத்தூர் : தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், கொத்தமல்லி விலை குறைவால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், 25,555 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. முக்கிய பயிராக சின்ன வெங்காயம், தக்காளி, மஞ்சள், வாழை, தென்னை உள்ளிட்டவை பயிரிடப்படுகிறது.அதோடு, குறுகிய கால பயிரான கொத்தமல்லி, கீரை வகைகள் பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி

தொண்டாமுத்தூர் : தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், கொத்தமல்லி விலை குறைவால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், 25,555 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. முக்கிய பயிராக சின்ன வெங்காயம், தக்காளி, மஞ்சள், வாழை, தென்னை உள்ளிட்டவை பயிரிடப்படுகிறது.அதோடு, குறுகிய கால பயிரான கொத்தமல்லி, கீரை வகைகள் பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது, தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், கொத்தமல்லி தழை விலை குறைந்துள்ளதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

செம்மேடு விவசாயி விஜயகுமார் கூறுகையில், "ஒரு ஏக்கரில், கொத்தமல்லி தழை பயிரிட்டுள்ளோம். ஒரு ஏக்கருக்கு, விதை, நடவு கூலி, பறிப்பு கூலி, வண்டி வாடகை என, 25 ஆயிரம் ரூபாய் செலவாகிறது. சாரல் மழை பெய்வதால், கொத்தமல்லி தழை நல்ல விளைச்சல் வந்துள்ளது.

இருப்பினும், ஓசூரில் இருந்து கோவைக்கு கொத்தமல்லி தழை வருவதால், விலை குறைந்துள்ளது. கேரள வியாபாரிகள் வருகையும் இல்லாததால், வெகுவாக விலை குறைந்துள்ளது.கடந்தாண்டு ஒரு கிலோ, 60 முதல் 70 ரூபாய் வரை விற்பனையானது. ஆனால் தற்பொழுது, கொத்தமல்லி தழை ஒரு கிலோ, 10 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இந்த விலை, விவசாயிகளுக்கு லாபத்தை தராது," என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X