குப்பைத்தொட்டியும் இல்லை; தெருவிளக்கும் எரியவில்லை! அடிப்படை வசதிகளுக்காக ஏங்குது ஜி.எம்.,நகர்

Added : செப் 30, 2021
Share
Advertisement
கோவை : சாலை, கழிவுநீர் வடிகால் உள்ளிட்ட, அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என, ஜி.எம்.நகர் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.வார்டு எண் 74க்கு உட்பட்ட ஜி.எம்., நகர், கோட்டைப்புதூர், சன் கார்டன், என்.எஸ்., கார்டன் உள்ளிட்ட பகுதிகளில் சுமார், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.இப்பகுதிகளில் சாலை, தெருவிளக்கு, குப்பைத்தொட்டி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட

கோவை : சாலை, கழிவுநீர் வடிகால் உள்ளிட்ட, அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என, ஜி.எம்.நகர் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

வார்டு எண் 74க்கு உட்பட்ட ஜி.எம்., நகர், கோட்டைப்புதூர், சன் கார்டன், என்.எஸ்., கார்டன் உள்ளிட்ட பகுதிகளில் சுமார், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.இப்பகுதிகளில் சாலை, தெருவிளக்கு, குப்பைத்தொட்டி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட ஏற்படுத்தி தரவில்லை என, இப்பகுதி மக்கள் புகார் எழுப்புகின்றனர்.சாலை ஓரங்களில் கொட்டப்பட்டுள்ள குப்பையும், பிளாஸ்டிக் பைகளில் கட்டி எறியப்பட்டுள்ள குப்பையும், சாக்கடையை அடைத்து தேங்கி நிற்கும் கழிவு நீரும், அப்பகுதியை சுகாதாரமற்ற பகுதியாக மாற்றுகிறது.

கடந்த, 10 ஆண்டுகளுக்கும் மேலாக சாக்கடைகளை சுத்தம் செய்யாமலும், குப்பை கொட்ட குப்பைத்தொட்டி வைக்கப்படாமலும் உள்ளது. மக்கள் காலி இடங்களில் குப்பையை எரித்து வருகின்றனர். இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக, மக்கள் தெரிவிக்கின்றனர்.இது குறித்து பலமுறை கோரிக்கை விடுத்தும் தீர்வு எட்டப்படாததால், கடந்த திங்களன்று அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்பகுதியை சேர்ந்த மெஹாஜுதீன் கூறுகையில், "கடந்த பத்து வருடங்களாகவே இப்பகுதியை அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் கண்டு கொள்ளாமலே உள்ளனர். சிறு மழை பெய்தால் கூட, சாலைகளில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி விடுகிறது. பெரும்பாலான இடங்களில் குப்பை கொட்டப்பட்டு உள்ளது. அவற்றை சுத்தம் செய்ய கூட, சுகாதார பணியாளர்கள் வருவதில்லை. பத்து வருடங்களாக இப்பகுதியில் எதிர்க்கட்சியை சேர்ந்தவர் எம்.எல்.ஏ.,வாக இருப்பதால், எந்த நலத்திட்டங்களும் கிடைப்பதில்லை்," என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X